பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : மக்களுக்கு செய்த துரோகம்!

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (70)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :சுபஸ்ரீ, பழங்காநத்தம், மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஒரு மாதத்தில் தான், கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்துள்ளதாம். அதாவது, நம் அரசியல்வாதிகள் மும்முரமாக, 'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே...' என்ற மனோபாவத்துடன் தேர்தல் பரப்புரை ஆற்றிய காலத்தில், இந்த நோய் தொற்று

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
சுபஸ்ரீ, பழங்காநத்தம், மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஒரு மாதத்தில் தான், கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்துள்ளதாம். அதாவது, நம் அரசியல்வாதிகள் மும்முரமாக, 'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே...' என்ற மனோபாவத்துடன் தேர்தல் பரப்புரை ஆற்றிய காலத்தில், இந்த நோய் தொற்று வேகமெடுத்துள்ளது. தங்களுக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், இந்த ஆட்சியாளர்களும், ஆட்சியை பிடிக்கத் துடிப்போரும், 'மக்கள் இறந்தாலும் பரவாயில்லை' என, விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிடுவர் என்பதற்கு, கொரோனா பரவல் உதாரணமாக மாறி இருக்கிறது.latest tamil newsபிரசாரம் என்ற பெயரில், கூட்டம் கூட்டி, கொரோனாவிற்கு உதவி புரிந்துள்ளனர். 'தேர்தல் முடிந்த பின், கொரோனாவை பார்த்துக் கொள்ளலாம்' என்ற செயல்பாடு, அயோக்கியத்தனம் அல்லவா? மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால், அவர்களுக்கு கேடு வரும் என அறிந்திருந்தும், கும்பல் கூடச் செய்திருப்பரா? அந்த பிரசாரக் கூட்டத்தில், யாரும் முக கவசம் அணியவில்லை; சமூகஇடைவெளி என்பதே இல்லை. அதுவும், தானா சேர்ந்த கூட்டமும் கிடையாது. பிரியாணிக்கும், 'குவார்ட்டர்' பாட்டிலுக்கும், 200 ரூபாய்க்கும்ஆசைப்பட்டு வந்த, ஏழை மக்கள். அவர்களின் வறுமையை மூலதனமாக்கி, குளிர் காயும் வஞ்சிக்கும் கும்பல், இப்போது, நோய் பரவலுக்கும் காரணமாக மாறியிருக்கிறது.

யார் செத்தால், அவர்களுக்கு என்ன... சில லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் போதும். இந்நாட்டில், மக்களின்உயிருக்கு அவ்வளவு தான் மரியாதை. எந்த அரசியல்வாதியும், 'ஏழையின் உடம்பிலும் ரத்தம் தான் ஓடுகிறது; அவனுக்கும், உணர்வுகள் உண்டு; மனைவி, பிள்ளைகள் என்ற பந்தங்கள் உண்டு' என, நினைப்பதில்லை. இதற்கு முன் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டம், கோடையில் கொளுத்தும் வெயிலில் நடக்கும். மக்கள், நாக்கு வறண்டு, காய்ந்து கிடப்பர். ஆனால், நடந்து முடித்த தேர்தல்பிரசாரக் கூட்டத்தில், கொரோனாவும் அல்லவா கொலைவெறியோடு பரவியது.


latest tamil newsகொரோனாவின் முதல் அலையின் போது அரசு மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆற்றிய தொண்டு, அவர்களுக்கு, மக்கள் நெஞ்சிலே ஓர் ஆலயமே அமைத்தது. ஆனால் இன்று, ஆட்சி அதிகாரத்திற்காக அரசியல்வாதிகள், அந்த கொரோனாவை மீண்டும் பரப்பியது, மன்னிக்கமுடியாத குற்றம்; மக்களுக்கு செய்த துரோகம்.


Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NRajasekar - chennai ,இந்தியா
13-ஏப்-202121:34:18 IST Report Abuse
NRajasekar True Every ஒன்னு விஷ டு become சி ம் nothing less than தட். Only aga டு kollai Adika
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
13-ஏப்-202121:30:57 IST Report Abuse
J.Isaac நாட்டு மக்கள் நலத்தில் அக்கறை கொண்ட பிரதமர், சுகாதார துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், முதல் அமைச்சர், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள். இப்போ கானொலி காட்சி ஆரம்பம். தனக்கு வரும்போது தான் அதன் வலி தெரியும்
Rate this:
Cancel
Lp Rajan -  ( Posted via: Dinamalar Android App )
13-ஏப்-202121:06:24 IST Report Abuse
Lp Rajan மறுக்கவோ,மறைக்கவோ முடியாத உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X