பொது செய்தி

இந்தியா

தொற்று பயமின்றி புனித நீராடிய மக்கள்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
டேராடூன் : கும்ப மேளா நிகழ்ச்சியை முன்னிட்டு, உத்தரகண்டில் குவிந்த பக்தர்கள், கொரோனா குறித்த கவலையின்றி, கங்கை நதியில் நேற்று புனித நீராடினர்.உத்தரகண்டில், முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநிலத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்ப மேளாவில், லட்சக்கணக்கானோர், புனித கங்கை நதியில் நீராடுவது வழக்கம். இதன்படி, கும்ப

டேராடூன் : கும்ப மேளா நிகழ்ச்சியை முன்னிட்டு, உத்தரகண்டில் குவிந்த பக்தர்கள், கொரோனா குறித்த கவலையின்றி, கங்கை நதியில் நேற்று புனித நீராடினர்.



latest tamil news



உத்தரகண்டில், முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநிலத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்ப மேளாவில், லட்சக்கணக்கானோர், புனித கங்கை நதியில் நீராடுவது வழக்கம். இதன்படி, கும்ப மேளாவில், பல்வேறு மடங்களைச் சேர்ந்த சாதுக்கள், பிரம்ம குண்டம் என, அழைக்கப்படும் ஹரி கி பைரி பகுதியில், நேற்று கங்கையில் நீராடினர்.


latest tamil news



பாதயாத்திரையாக வந்து, புனித நீராடிய சாதுக்கள் மீது, மாநில அரசு தரப்பில், ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துாவப்பட்டன. இது தவிர, கங்கையின் பிற இடங்களில் லட்சக்கணக்கானபக்தர்கள் புனித நீராடினர். மாநில அரசு தகவல்களின்படி, 17.31 லட்சத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் கும்ப மேளாவை முன்னிட்டு நேற்று கங்கையில் புனித நீராடினர். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இவர்களில் யாரும் முக கவசம், சமூக இடைவெளி உட்பட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஏப்-202120:08:01 IST Report Abuse
தமிழவேல் அப்போ எதுக்கு தமிழகத்திலே மட்டும் கோவில் விழாக்களுக்குத் தடை 🤔 இந்த அளவுக்கா இங்கே கூட்டம் கூடுது ?
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
13-ஏப்-202115:26:59 IST Report Abuse
J.Isaac எந்த மதத்தை சார்ந்தவராயினும், புனிதம், பார்வையில், எண்ணத்தில், செயலில், நடத்தையில் பேச்சில், இருக்க வேண்டும். மனிதநேயம், நீதி, நியாயம், நேர்மை போன்ற பண்புகளை வளர்க்க வேண்டும். எந்த இறைவனும், கொள்ளையடித்த, லஞ்சம் வாங்கிய, அரசை ஏமாத்தி வரிஏய்ப்பு செய்து சம்பாதித்த பணத்தை உண்டியல் கேட்பது இல்லை. இறைவன் மனிதனிடம் பணம் கேட்க அவர் பிச்சைக்காரர் அல்ல. சுய புத்தி வேண்டும். இல்லை என்றால் சொல் புத்தி வேண்டும். இந்த மாநிலத்தின் உண்மையான பாதிப்பு ஊடங்களில் வெளிவருவதில்லை.
Rate this:
jagan - Chennai,இலங்கை
13-ஏப்-202119:16:51 IST Report Abuse
jaganதசமபாகத்தையும் சேர்த்து தானே?...
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஏப்-202113:38:28 IST Report Abuse
Ramesh R மத நம்பிக்கையின் பெயரால் அலட்சியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X