சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. பெண்ணை தாக்கிய வாலிபர் கைதுகோவை: பெண்ணை தாக்கிய வாலிபர், கைது செய்யப்பட்டார். கோவை, நீலிக்கோணாம் பாளையம், சி.எம்.சி., காலனியை சேர்ந்தவர் உமா, 35. இவர் நேற்று முன்தினம், அவரது வீட்டின் முன் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணபாபு, 23, என்பவர் பைக்கில் வேகமாக பெண் மீது, மோதுவது போல் வந்துள்ளார். இதனை உமா

தமிழக நிகழ்வுகள்
1. பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
கோவை: பெண்ணை தாக்கிய வாலிபர், கைது செய்யப்பட்டார். கோவை, நீலிக்கோணாம் பாளையம், சி.எம்.சி., காலனியை சேர்ந்தவர் உமா, 35. இவர் நேற்று முன்தினம், அவரது வீட்டின் முன் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணபாபு, 23, என்பவர் பைக்கில் வேகமாக பெண் மீது, மோதுவது போல் வந்துள்ளார். இதனை உமா கண்டித்துள்ளார்.கோபமடைந்த வாலிபர், பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. சிங்காநல்லுார் போலீசில் உமா புகார் அளித்தார். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.latest tamil news2. தம்பதியை கட்டி போட்டு 4 லட்சம் ரூபாய், 70 சவரன் நகை கொள்ளை
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த உரக்கடை அதிபர், மனைவியை கட்டிப் போட்ட முகமூடி கும்பல், 4 லட்சம் ரூபாய், 70 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள பி.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் நாராயண ராஜா, 60; மனைவி ஜமுனா, 56. இருவரும் ராஜபாளையத்தில் வசிக்கின்றனர். இவர்களின் இரு மகள்களும் திருமணமாகி, திருநெல்வேலியில் வசிக்கும் நிலையில், அங்கு நாராயண ராஜா, உரக்கடை நடத்துகிறார்.இந்நிலையில், நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு பின்பக்க சுவர் வழியே ஆறு பேர் அடங்கிய முகமூடி கும்பல், நாராயணராஜா வீட்டுக்குள் குதித்தது.


latest tamil newsவீட்டு கதவை உடைத்து, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தவர்கள், அவரை அடித்து, உதைத்து கட்டிப் போட்டனர். ஜமுனாவை மிரட்டி, பீரோக்களின் சாவியை வாங்கியவர்கள், அவரையும் கட்டிப் போட்டு, 70 சவரன் நகை, 4 லட்சம் ரூபாயை, கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை கும்பல் ஹிந்தி, ஆங்கிலத்தில் பேசியுள்ளது. ஐந்து தனிப்படைகள் அமைத்து, கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

3. துரைமுருகன் சொகுசு பங்களாவில் திருட்டு
திருப்பத்துார்: ஏலகிரி மலையில் உள்ள துரைமுருகன் சொகுசு பங்களாவில், திருட்டு நடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனுக்கு, திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை மஞ்சகொல்லை என்ற இடத்தில், 25 ஏக்கர் நிலத்தில், சொகுசு பங்களா உள்ளது. கோடையில், குடும்பத்‍தோடு இங்கு தங்கி, ஓய்வெடுப்பார். காவலாளியாக பிரேம்குமார், 45, பணியாற்றி வருகிறார்.நேற்று காலை, 8:00 மணிக்கு பங்களாவுக்கு காவலாளி வந்தபோது, கதவு உடைக்கப் பட்டு திறந்து கிடந்தது. ஏலகிரி மலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சோதனையில், 'சிசிடிவி' கேமரா, 'ஹார்டு டிஸ்க்' திருட்டு போனது தெரிந்தது. வீட்டுக்குள் இருந்த இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தன. துரைமுருகன், அவரது மகன், குடும்பத்தினர் கொரோனா பாதிப்புக்கு, சிகிச்சை பெற்று வருகின்றனர். 'அவர்கள் வந்து பார்த்தால் தான், கொள்ளை போன பொருட்களின் விபரம் தெரியவரும்' என, போலீசார் தெரிவித்தனர்.


latest tamil news4. கேரளாவுக்கு கருங்கல் கடத்தல்: எல்லையில் 5 லாரிகள் சிறை
பொள்ளாச்சி: கேரளாவுக்கு, கூடுதலாக கருங்கல் பாரம் ஏற்றிச் சென்று, கோவிந்தனுார் மக்களால் சிறைபிடிக்கப்பட்ட ஐந்து லாரிகள், பொள்ளாச்சி ஆர்.டி.ஓ., அலுவலக நடவடிக்கைக்கு கொண்டு செல்லப்பட்டன.

பொள்ளாச்சி அருகே, தமிழக எல்லையில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இக்குவாரிகளால், நிலத்தடி நீர் மட்டம் குறைவதாக குற்றம் சாட்டும் விவசாயிகள், உடனடியாக குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.இந்நிலையில், கேரளாவுக்கு கூடுதல் கருங்கல் பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள், அதிவேகமாக எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடும் செய்யாமல் செல்வதால், தவறி விழும் கற்களால் உயிர்பலி ஏற்பட்டுவிடுமோ என, மக்கள் அச்சத்துடன் ரோட்டில் பயணிக்கின்றனர்.

இதற்கிடையில், நேற்று தேவம்பாடிவலசு பகுதியில் செயல்படும் கல்குவாரியில் இருந்து, கூடுதல் பாரம் ஏற்றிக்கொண்டு, கோவிந்தனுார் பகுதியில் லாரிகள் வேகமாக சென்றதால், அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்து, கேரளாவை சேர்ந்த ஐந்து லாரிகளை சிறைபிடித்தனர். இந்த லாரிகளில் இரண்டுக்கு எவ்வித உரிமமும் இல்லை என கூறப்படுகிறது.கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வடக்கிபாளையம் போலீசுக்கும் தகவல் கொடுத்து, வரவழைக்கப்பட்டனர். கூடுதல் பாரத்துடன் அதிகவேகமாக சென்ற ஐந்து லாரிகளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பொள்ளாச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு லாரிகள் கொண்டு செல்லப்பட்டன.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டும், கூடுதலாக பாரம் ஏற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு, அபராதம் விதிக்க, நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

5. ஓட்டலில் லத்தியால் தாக்குதல்: அடாவடி எஸ்.ஐ., இடமாற்றம்
கோவை : கோவையில், இரவு நேரத்தில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது, எஸ்.ஐ., லத்தியால் தாக்கியதில், பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்; கண்மூடித் தனமாக செயல்பட்ட எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

கோவை, காந்திபுரம், மத்திய பஸ் ஸ்டாண்ட், சாஸ்திரி ரோட்டில், மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 10:20 மணியளவில், பெண்கள் உட்பட, சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காட்டூர் போலீசார், அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை சொல்லி, கடைகளை மூடுமாறு, மைக்கில் அறிவித்தபடி வந்தனர். அப்போது, பாதி 'ஷட்டர்' மூடப்பட்டிருந்த ஓட்டலுக்குள், லத்தியுடன் நுழைந்த எஸ்.ஐ., முத்து, உள்ளே இருந்தவர்களை வெளியேறுமாறு சொல்லி, லத்தியால் சரமாரி தாக்கினார்.


latest tamil newsஇதில், ஓசூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, 40 என்பவருக்கு கண் அருகே காயம் ஏற்பட்டது. அங்கிருந்த மேலும் மூவர் தாக்கப்பட்டனர்.இது குறித்து, நேற்று காலை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்டவர்கள் புகார் அளித்தனர். அதில், ஓட்டலில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் இணைத்திருந்தனர். இதையடுத்து, உதவி கமிஷனர் பிரேமானந்த், குறிப்பிட்ட கடைக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்கள், காயமடைந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார். இந்நிலையில், எஸ்.ஐ., முத்துவை ஆயுதப்படைக்கு மாற்றி, கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக, இரண்டு வாரத்துக்குள் விரிவான அறிக்கை கேட்டு, மாநகர போலீஸ் கமிஷனருக்கு மாநில மனித உரிமை ஆணையமும், 'நோட்டீஸ்' வழங்கி உள்ளது.

இந்தியாவில் நிகழ்வுகள்:
மருத்துவமனையில் அதிர்ச்சி
பாட்னா: பீஹாரின் பாட்னா அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், மஹ்மத்பூரை சேர்ந்த சுன்னு குமார் என்பவர், கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுகிறார். நேற்று முன்தினம் அவர் இறந்ததாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், அவரது உறவினர்களிடம், மற்றொரு நபரின் உடலை ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தவறுக்கு காரணமானோர் குறித்து விசாரிக்க, பாட்னா கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.


latest tamil newsஉலக நிகழ்வுகள் :-இஸ்ரேலை பழி வாங்குவோம்: ஈரான் அரசு கொக்கரிப்பு
துபாய் : ஈரான் அரசு, அதன் அணு உலையில் ஏற்பட்ட பாதிப்புக்கு இஸ்ரேல் தான் காரணம் என, குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஈரானில், நடான்ஸ் என்ற இடத்தில், அணு உலை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று முன்தினம், யுரேனியம் செறிவூட்டலுக்கான இயந்திரம் திடீரென சேதமடைந்தது.இதையடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை இருளில் மூழ்கியது. ஒரு பிரிவில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஈரான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.'இஸ்ரேலின் உளவுப் பிரிவான, 'மொஸாட்' டின்கணினி நாசகர வேலைதான்,அணு உலை சேதத்திற்கு காரணம்' என, ஈரான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

''இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். பழிக்குப் பழி வாங்குவோம்,'' என, ஈரான், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சயீத் கதிப்சதே எச்சரித்து உள்ளார்.ஏற்கனவே, அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக, இஸ்ரேல் - ஈரான் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.இந்நிலையில், அணு உலையில் ஏற்பட்ட சேதம், இரு நாடுகளிடையேயான உறவில், மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 2010ல், நடான்ஸ் அணு உலை கணினியில், வைரஸ் புகுந்ததை அடுத்து, யுரேனியம் செறிவூட்டும் இயந்திரம் சேதமடைந்தது. இதற்கு, அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு சதி தான் காரணம் என, ஈரான் குற்றம் சாட்டி இருந்தது.இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டினை சந்தித்து பேசினார். அணு உலை விவகாரம்குறித்து, நெதன்யாகு கூறும்போது, ''நாங்கள் என்ன செய்தோம் என்பதை கூறுவது கடினம்,'' என, தெரிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-ஏப்-202101:12:15 IST Report Abuse
DARMHAR அரசியல் வியாதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் அடிபொடிகளுக்கும் ஆசைக்கு ஒரு அளவே கிடையாது என்பது நிதரிசனமான உண்மை
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
14-ஏப்-202112:33:18 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் மின்சாரவாரிய லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிவாக சீர்கேடு ,தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -மதுரை திருமங்கலம் மின்சாரவாரியத்தின் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை , லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது , பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள் .கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் திருமங்கலம் மின்சாரவாரியத்தின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் மின்சாரவாரியத்தின் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை திருமங்கலம் தமிழ் நாடு மின்சாரவாரியத்திற்கு
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
13-ஏப்-202114:49:03 IST Report Abuse
M  Ramachandran துறை முருகன் படிப்பிறகே எம் ஜி ஆர் தான் இப்போது ஏலகிரி மலையில் 25 acres இல் சொகுசு பங்களா இன்னும் மகனுக்கு மருமகளுக்காக தன் குடும்பத்திற்காக உழைத்துள்ளார் மக்களுக்காக அல்ல. எவரும் சுடாலினும் பரம எள்ளி மக்களுக்காக இந்த தேர்தலில் நின்று உழைக்க போகிறார்கள். ஒன்று தேர்ந்தேடுக்கும் மக்கள் மூடர்கள். அல்லது அவர்கள் கூறுவதெல்லாம் பொய். பொய் இன்றி வேறு ஒன்றும் வாயிலிருந்து வராது. மும்பு சபரீசன் சுடாலின் மருமகன் அவருடைய பங்களா ( Sophisticated ) 500 கோடிக்கு மேல் மதிப்பு பெரும் என்று கணக்கிட்டுள்ளார்கல்..தமிழக அரசியல் வாதிகளின் ஆ......ஆசைக்கு ஒரு அளவே இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X