பொது செய்தி

இந்தியா

இசைக்குழு பாடல் வாயிலாக கேரளாவில் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு பிரசாரம்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொச்சி : கேரள மருத்துவ மாணவர்களின் நடனம், சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்ததை அடுத்து, அதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வு, 'வீடியோ'வை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர்.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் திருச்சூர் மருத்துவ கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் ஜானகி ஓம்குமார்

கொச்சி : கேரள மருத்துவ மாணவர்களின் நடனம், சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்ததை அடுத்து, அதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வு, 'வீடியோ'வை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர்.



latest tamil news



கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் திருச்சூர் மருத்துவ கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் ஜானகி ஓம்குமார் மற்றும் நவீன் ரஸாக் ஆகியோர், 30 வினாடிகள் ஓடக்கூடிய, 'வீடியோ' வை, சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியிட்டனர். அதில், அறுவை சிகிச்சை அறையில் டாக்டர்கள் பயன்படுத்தும் உடை அணிந்து, 1970களில் பிரபலமடைந்த, 'போனி எம்' இசைக்குழுவின் ரஸ்புடின் என்ற பிரபல பாடலுக்கு, நடனம் ஆடினர்.


latest tamil news



இது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில், கேரள மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து, கேரள போலீசார் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.அதில், 'போனி எம்' குழுவின் ரஸ்புடின் பாடலுக்கு, 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பு மருந்துகள், நடனமாடுவதைப் போல, 'கிராபிக்ஸ்' செய்யப்பட்டு உள்ளது. இறுதியில், அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மன்னிப்பு - Madurai,இந்தியா
13-ஏப்-202112:21:59 IST Report Abuse
மன்னிப்பு ஆமா இது கேரள மாடல் கண்டிப்பாக இதுக்கு கொரானா உடனே ஒழிந்து விடும். ஆனா கொரானா ஒழிப்பு முன்கள பணியாளர்களுக்கு நன்றி சொல்லி விளக்கேற்ற சொன்னால், விளக்கேற்றினால் கொரானா ஒழியுமானு புத்திசாலிகள் படை எடுப்பார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
13-ஏப்-202111:38:35 IST Report Abuse
ShivRam ShivShyam உடனே கேரளா மாடல் க்யூபா மாடல்.. பினராய் பார் பிடல் காஸ்டெரோவா பார்னு எவனாவது இங்க கருத்து போட்டீங்க .. மவனே உண்டு இல்லேன்னு ஆயிடுவீய்ங்க ..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஏப்-202108:36:11 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள் காவல் துறையிலேயே எவ்வளது திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள் அவர்களை வைத்து செய்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X