போர் கப்பலை உடைக்கும் பணி; தடை விதிக்க கோர்ட் மறுப்பு

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் மிகப் பழமையான போர்க் கப்பலான, ஐ.என்.எஸ்., விராட்டை உடைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கடற்படையிலும், பின், நம் கடற்படையில், 30 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணியாற்றியுள்ளது, ஐ.என்.எஸ்., விராட் போர்க் கப்பல். வலியுறுத்தல்கடந்த, 2015ல், இந்தப் போர்க் கப்பலை இதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்றும்,

புதுடில்லி : நாட்டின் மிகப் பழமையான போர்க் கப்பலான, ஐ.என்.எஸ்., விராட்டை உடைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.latest tamil newsஐரோப்பிய நாடான பிரிட்டனின் கடற்படையிலும், பின், நம் கடற்படையில், 30 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணியாற்றியுள்ளது, ஐ.என்.எஸ்., விராட் போர்க் கப்பல். வலியுறுத்தல்கடந்த, 2015ல், இந்தப் போர்க் கப்பலை இதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்றும், அதை உடைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

'இந்தப் போர்க் கப்பலை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும்' என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதற்காக நடந்த முயற்சிகள் தோல்விஅடைந்தன. இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் நிறுவனம், 35.8 கோடி ரூபாய்க்கு அதை வாங்கியது.

குஜராத்தின் அலாங்க் பகுதியில், அந்த கப்பலை உடைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த, 'என்விடெக்' என்ற கப்பல் ஆலோசனை நிறுவனம், கப்பலை வாங்குவதற்கு தயாராக இருந்தது. இது தொடர்பாக பல சுற்று பேச்சு நடத்தப்பட்டும், ஸ்ரீராம் நிறுவனம் தயாராக இருந்தும், ராணுவ அமைச்சகத்திடம் இருந்து பதில் கிடைக்க வில்லை.


latest tamil newsவழக்கு : இதையடுத்து, கப்பலை உடைப்பதற்கு தடை கோரி, அந்த நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு: நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். ஏற்கனவே, கப்பலின், 40 சதவீதம் உடைக்கப்பட்டு விட்டது. இதற்கு மேலும், கப்பலை உடைப்பதற்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு அமர்வு தீர்ப்பளித்தது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) கப்பலை அருங்காட்சியகமாக மாற்றுவதால் யாருக்கு என்ன நஷ்டம்? உடைப்பதால் யாருக்கோ லாபம் போல?
Rate this:
Nsnatarajan Iyer - Bangalore,இந்தியா
13-ஏப்-202107:22:04 IST Report Abuse
Nsnatarajan Iyerஇந்த மாதிரி லாப நஷ்ட கணக்கு போடறது உபிஸ்க்கு கை வந்த கலை யாChசே...
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-ஏப்-202110:24:26 IST Report Abuse
pradeesh parthasarathyமதவாதியும் இனவாதியும் சேர்ந்து குழப்புறானுங்க ......
Rate this:
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
13-ஏப்-202110:55:42 IST Report Abuse
Apposthalan samlin2கி 2கி என்று கூவுகிறீர்களே இதுவும் அது போல தான் ராம் நிறுவனம் குஜராத்தி 34 கோடி என்வீட்ச் நிறுவனம் 60 கோடி கொடுக்க தயாரா இருந்த போதிலும் ஏன் ராம் நிறுவனத்துக்கு கொடுத்தார்கள் ?...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
13-ஏப்-202111:23:05 IST Report Abuse
Dr. Suriyaபோர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் அதில் உள்ள தொழில் நுட்பம் அருங்காட்சியகம் என்ற பெயரில் எதிரி நாடுகளுக்கு போய்விடக்கூடாது அதனால் உடைப்பதே சரி........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X