பொது செய்தி

இந்தியா

உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகிக்க தடை

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை உடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின் மே மாதம் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி

புதுடில்லி : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை உடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



நம் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின் மே மாதம் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. சர்வதேச விமானங்களுக்கான தடை இதுவரை 'வாபஸ்' பெறப்படவில்லை. எனினும் 'வந்தே பாரத்' திட்டம் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு இடையே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


latest tamil news



இந்நிலையில் குறைந்த பயண நேரத்தை உடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை உடைய விமானங்களில் உணவு வினியோகிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202120:23:10 IST Report Abuse
Sundararaman Iyer குடிக்க தண்ணி கூட கொடுப்பதில்லை, இந்த லக்ஷணத்தில் சாப்பாடு எங்கே?
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
13-ஏப்-202118:23:56 IST Report Abuse
கொக்கி குமாரு கடவுளே திருட்டு திமுகக்காரன் எவனும் உள்நாட்டு விமானத்தில் பயணிக்க கூடாது. உணவு கொடுக்கவில்லையென்றால் வம்பிழுத்து குஸ்தி சண்டை போடுவார்கள்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஏப்-202113:27:04 IST Report Abuse
தமிழவேல் அதை தின்னாமல் இருப்பதே நல்லது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X