கூடுதல் தடுப்பூசி அவசியம்: பிரதமருக்கு சோனியா கடிதம்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி : 'கொரோனா பரவல் அதிகரிப்பதால், அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் தடுப்பூசிகளை, அவசரகால அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்., தலைவர் சோனியா கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா பரவல் நிலவரம் குறித்து, காங்., ஆளும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பின், பிரதமர் நரேந்திர மோடிக்கு, சோனியா எழுதியுள்ள கடிதம்:
Congress,Sonia Gandhi,PM Modi,Corona Vaccine,காங்கிரஸ்,சோனியா,சோனியா காந்தி

புதுடில்லி : 'கொரோனா பரவல் அதிகரிப்பதால், அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் தடுப்பூசிகளை, அவசரகால அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்., தலைவர் சோனியா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் நிலவரம் குறித்து, காங்., ஆளும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பின், பிரதமர் நரேந்திர மோடிக்கு, சோனியா எழுதியுள்ள கடிதம்: உள்நாட்டில், கொரோனா தடுப்பூசிகளின் தயாரிப்பு திறனை, தற்போதைய நிலையில் இருந்து மேம்படுத்த வேண்டும்.அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் நிறுவனங்களின் தடுப்பூசிகளை, அவசர கால அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


latest tamil news


வயது அடிப்படையில் இல்லாமல், தேவை மற்றும் பாதிப்பின் அடிப்படையில், தடுப்பூசி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும், வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் அடிப்படையில் தடுப்பூசிகளை வினியோகம் செய்வது அவசியம். கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவோருக்கு, தகுதியின் அடிப்படையில் மாதந்தோறும், 6,000 ரூபாய் வழங்க வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான மருந்துகள், சிகிச்சை கருவிகள் மற்றும் உபகரணங்களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரியில் விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-ஏப்-202120:04:31 IST Report Abuse
sankaseshan விடியாதவன் கூவட்டும் அவனால் அரசின் திறமையை ஒப்புக்கொள்ள முடியவில்லை உடம்பு முழுவதும் பொறாமை .
Rate this:
Poornakumar - Bangalore,யூ.எஸ்.ஏ
14-ஏப்-202102:04:12 IST Report Abuse
Poornakumarசெம திறமை தான்......
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஏப்-202116:44:20 IST Report Abuse
Endrum Indian அதுவும் சீனா மேக் இருந்தால் நல்லது - இப்படிக்கு சீனாவுடன் அக்ரீமெண்ட் போட்டுள்ள சோனியா
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
13-ஏப்-202115:55:11 IST Report Abuse
Karthik இது அரசாங்கத்துக்கு தெரியாது பாருங்க. நீங்க சொல்லித்தான் தெரியனுமா? ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக அறைகூவல் விடுது, இந்த அம்மா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X