பொது செய்தி

இந்தியா

'இரவு ஊரடங்குக்கு பதில் வேலை நேரத்தை மாற்றலாம்'

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வெவ்வேறு துறைகளுக்கு, வெவ்வேறு வேலை நேரத்தை அறிவிக்கலாம் என்று, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, 'சி.ஏ.ஐ.டி.,' பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்து, இவ்வமைப்பு தெரிவித்து உள்ளதாவது:கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, இரவு நேர தடை விதிக்கும் முடிவு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அப்படி
CAIT, NightLockdown, Time, சிஏஐடி, இரவு ஊரடங்கு

புதுடில்லி: நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வெவ்வேறு துறைகளுக்கு, வெவ்வேறு வேலை நேரத்தை அறிவிக்கலாம் என்று, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, 'சி.ஏ.ஐ.டி.,' பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து, இவ்வமைப்பு தெரிவித்து உள்ளதாவது:கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, இரவு நேர தடை விதிக்கும் முடிவு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அப்படி இரவில் ஒட்டு மொத்தமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு பதில், வெவ்வேறு துறைகளுக்கு, வெவ்வேறு வேலை நேரத்தை அறிவிக்கலாம். உதாரணமாக, அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் காலை, 8 மணி முதல், மதியம், 2 மணி வரை இயங்கும் என, அறிவிக்கலாம்.


latest tamil news


கடைகள், சந்தைகள் போன்றவை காலை, 11 மணி முதல், மாலை, 5 மணி வரை இயங்கும் என, அறிவிக்கலாம். இதை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப, வேலை நேரத்தை அறிவிக்கலாம். இப்படி செய்யும்பட்சத்தில் பொருளாதார மீட்சி பாதிக்கப்படாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
13-ஏப்-202122:11:05 IST Report Abuse
spr பகல் நேரத்தில்தான் நடமாட்டம் அதிகம் அதனைத்தவிர்க்க மக்கள் பொருட்களை வாங்க கடைக்குப் போக வேண்டாம் அவை ஆன்லைன் மற்றும் வாட்சாப் தொடர்பின் மூலம் வீட்டிலேயே கொண்டு தருவதன் மூலம் பெரும்பான்மையான நடமாட்டம் தவிர்க்கப்பட்டு, வயதானவர்கள் பெண்கள் வெளியில் செல்வது குறையலாம் இப்பொருட்களைக் கொண்டு சேர்க்க ஆட்கள் வேண்டுமென்பதால் படிப்பறிவில்லாத பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் வேலைக்குப் போவோர் காலையில் ஒரு பகுதியும் இரவில் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டால் அவர்களின் நடமாட்டம் குறையும் மற்றபடிஇப்பொழுது அனைத்துமே தொலைகாட்சி மற்றும் இணையத்தில் வர தொடங்கிவிட்டதால் சினிமா அரங்கங்கள் கொரோனா மருத்துவ நிலையமாக உணவு தானியங்கள் சேமிப்புக்கு கிடங்குகளாக, வியாபாரத் தலங்களாக மாற்றப்படலாம் மழை மற்றும் இதர இயற்கை காரணமாக பொருட்கள் வீணாவது குறையும் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் அங்கே செல்லும் கும்பல் குறையும் மதுவிலக்கு அமுலாகும் திருட்டுத்தனமாக குடித்து மரணமடைவோரை காப்பாற்றுவதற்காக டாஸ்மாக் என்பது தேவையில்லை குடித்து மட்டையானவனால் எப்படியும் அவன் குடும்பம் பயன்பெறவில்லை பிரச்சினைதான் அதிகம் எனவே அவன் இருந்தாலும் இல்லாதவனே இதன் மூலம் மதுவிலக்கு முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவே இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் அதிகம் நடமாட்டம் இல்லாத இரவு முதல் காலைவரை ஊரடங்கு அமுல் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்
Rate this:
Cancel
Lalita - Chennai,இந்தியா
13-ஏப்-202120:23:30 IST Report Abuse
Lalita Night curfew or lockdown is unnecessary. Lockdown is very dangerous than corona.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஏப்-202117:33:42 IST Report Abuse
Endrum Indian இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு??? அப்போது தான் மக்கள் சாலைகளில் அதிகமாக நடமாடுகின்றார்கள் ???அப்படித்தானே???இந்த மாதிரி அறிவிலி அரசு இருக்கும் வரை நாட்டிலிருந்து கொரோனா போகவே போகாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X