பொது செய்தி

தமிழ்நாடு

"ஜாதிய வன்முறைகளுக்கு தமிழகத்தில் ஜாதிக் கட்சிகளும் ஜாதிய தலைவர்களும் இருப்பதும் காரணமாக இருக்குமோ... "

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (74)
Share
Advertisement
தமிழகத்தில் தான் ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கின்றன. இதற்கு காரணம், தமிழகத்தில் தான், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் சரிவர பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், தமிழக அரசு தலித் விரோத போக்கை கொண்டுள்ளது.- வி.சி.க., தலைவர் திருமாவளவன்'ஜாதிய வன்முறைகளுக்கு, தமிழகத்தில் ஜாதிக்கட்சிகளும், ஜாதிக்கட்சி தலைவர்களும் அதிக அளவில் இருப்பதும் காரணமாக இருக்குமோ...' என, பதிலடி
பேச்சு_பேட்டி_அறிக்கை, திருமாவளவன், ஜாதி, வன்முறை

தமிழகத்தில் தான் ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கின்றன. இதற்கு காரணம், தமிழகத்தில் தான், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் சரிவர பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், தமிழக அரசு தலித் விரோத போக்கை கொண்டுள்ளது.
- வி.சி.க., தலைவர் திருமாவளவன்


'ஜாதிய வன்முறைகளுக்கு, தமிழகத்தில் ஜாதிக்கட்சிகளும், ஜாதிக்கட்சி தலைவர்களும் அதிக அளவில் இருப்பதும் காரணமாக இருக்குமோ...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சுநடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும். தி.மு.க., கூட்டணியில் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.
- தி.மு.க., பிரமுகர் நாஞ்சில் சம்பத்


'தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்றே வைத்துக் கொள்வோம். ஆட்சியில், கூட்டணி கட்சியினருக்கு பங்கு கொடுக்கப்படுமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., பிரமுகர் நாஞ்சில் சம்பத் பேச்சுபடித்தவர்கள், திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை- என, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நான், பழனிவேல் தியாகராஜன் பி.டெக்., கெமிக்கல் இன்ஜினியரிங், எம்.எஸ்., - எம்.பி.ஏ., - பிஹெச்டி படித்திருக்கிறேன். நான் திருமாவளவனுடன் உள்ளேன்.
- தி.மு.க., - எம்.எல்.ஏ.,- பி.தியாகராஜன்


'நீங்கள் இவ்வளவு அதிகம் படித்தும் என்ன செய்ய...அன்புமணி சொன்னதன் அர்த்தம் உங்களுக்கு விளங்கவில்லையே...' என, கூறத் துாண்டும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,- பி.தியாகராஜன் அறிக்கைlatest tamil news


உலக மேடைகளில் எல்லாம் திருக்குறளை பேசும் பிரதமர் மோடி, உலகப் பொதுமறையாம் திருக்குறளை, தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், ஒரு இனத்தின் பெருமையை மட்டுமல்ல, இந்த தேசத்தின் பெருமையும் உலகுக்கு தெரியும்.
- கவிஞர் வைரமுத்து


'திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள பிரதமர் மோடி, உங்களின் கோரிக்கையை ஏற்று, செய்தாலும் செய்து விடுவார்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கவிஞர் வைரமுத்து பேச்சு234 சட்டசபை தொகுதிகளிலும், எங்கள் கூட்டணியினர் வெற்றி பெறுவர் என்பது விருப்பம். எனினும், ஜெ., இல்லாததால், சில இடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் கிடைத்து, மீண்டும் ஆட்சி அமைப்போம்.
- அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலர் நடிகை விந்தியா


'தி.மு.க.,வும் இப்படித் தான் சொல்கிறது. ஆட்சி அமைக்கப் போவது, எந்த கட்சி என்பது தான், இப்போதைய, 'மில்லியன் டாலர்' கேள்வியாக உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலர் நடிகை விந்தியா பேட்டி

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
14-ஏப்-202112:29:13 IST Report Abuse
mindum vasantham saathiyai vaiththu vyabaram athikam seithavar thiruma ippa padam ellam
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202122:36:54 IST Report Abuse
Rajagopal சாதிகள் இல்லையெனில் அரசியல் வியாபாரம் இல்லையடி பாப்பா.
Rate this:
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
13-ஏப்-202122:17:55 IST Report Abuse
SENTHIL சுயநலம் பிடித்த இந்த குள்ள நரிகளால் தான் இத்தனை அவலங்களும் நடக்கின்றன. ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு தேவையான ஆரோக்கியமான எந்த முன்னேற்ற விஷயங்களையும் முன்னெடுக்காமல் ஏதோவொரு காலத்தில் ஏதோவொரு சமூகம் செய்த விஷயங்களை பற்றி பேசியே மக்களை முட்டாளாக்கும் இந்த சதி கூட்டம் என்று தூய்மையாகிறதோ அன்றுதான் உண்மையான சாதி விடுதலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X