பொது செய்தி

இந்தியா

‛ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிக்கு டி.சி.ஜி.ஐ., அனுமதி

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதை அடுத்து, ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை, நம் நாட்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வர , டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, மூன்றாவது தடுப்பூசி, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு
ஸ்புட்னிக்-வி, தடுப்பூசி, டி.சி.ஜி.ஐ., அனுமதி,Sputnik V

புதுடில்லி: கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதை அடுத்து, ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை, நம் நாட்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வர , டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, மூன்றாவது தடுப்பூசி, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இணைந்து, 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்து உள்ளன.நம் நாட்டில் இந்த தடுப்பூசியை, மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, 'சீரம் இந்தியா' நிறுவனம் தயாரித்து, வினியோகித்து வருகிறது. தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தினரால், 'கோவாக்சின்' தடுப்பூசி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த இரண்டு தடுப்பூசிகளும், மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின், ஜனவரி மாதம் முதல், பயன்பாட்டில் உள்ளன.


புதிய வேகம்


நம் நாட்டில், 10 கோடிக்கும் அதிகமானோருக்கு இந்த இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டு உள்ளன. கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தி உள்ளது. தடுப்பூசி திருவிழா என்ற பெயரில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி, புதிய வேகம் எடுத்துள்ளது.தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஒருபுறம் வலுத்து வருகிறது.

இப்போதே மஹாராஷ்டிரா உட்பட, பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவாவாக்ஸ், சைடஸ் கடிலா, இன்ட்ராநேசல்' ஆகிய ஐந்து புதிய தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க திட்டமிட்டு வருவதாக, நேற்று முன் தினம் செய்தி வெளியானது.இதில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசிக்கு, அடுத்த, 10 நாட்களுக்குள் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.


latest tamil news
விற்பனை


ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை, ரஷ்யாவை சேர்ந்த, காமாலியா நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்காவின், 'மாடர்னா, பைஸர்' தடுப்பூசிகளுக்கு பிறகு, ஸ்புட்னிக் - வி, 91.6 சதவீத செயல்திறனுடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு, 'டோஸ்' தடுப்பூசி, சர்வதேச சந்தையில், 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 'இந்த தடுப்பூசி, 2 முதல், 8 டிகிரி செல்ஷியஸ் தட்பவெப்ப நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்' என, நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த தடுப்பூசியை, தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த, 'டாக்டர் ரெட்டிஸ்' நிறுவனம் தயாரித்து வினியோகிக்க உள்ளது. இதன் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி, டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம், பிப்ரவரியில் விண்ணப்பித்தது.நம் நாட்டில், 18ல் இருந்து, 99 வயதுக்கு உட்பட்ட, 1,600 பேரிடம், இந்த தடுப்பூசி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது.


பரிந்துரை


இதன் மூன்றாம் கட்ட சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் அமெரிக்க நாடான வெனிசுலா, ஐரோப்பிய நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளில், இந்த தடுப்பூசி, பரிசோதனை நிலையில் உள்ளது.
இந்நிலையில், ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை நம் நாட்டில், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர, நிபுணர்கள் குழு, நேற்று பரிந்துரை அளித்துள்ளது. தொடர்ந்து, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, நிபுணர் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, நாட்டின் மூன்றாவது கொரோனா தடுப்பூசியாக, ஸ்புட்னிக் - வி, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
இதனை தொடர்ந்து, ரஷ்யா, பெலாரஸ், அர்ஜென்டினா, பொலிவியா, செர்பியா, அல்ஜீரியா, துனிசியா, அர்மீனியா, மெக்சிகோ, நிகாரகுவா, லெபனான், மியான்மர், பாகிஸ்தான் மங்கோலியா, பஹ்ரைன், மொடெனெக்ரோ, கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கபோன், சான் மெரினோ, கானா, சிரியா, கிரிகிஸ்தான், குயானா,எகிப்து, ஹோண்டுராஸ், கவுதமாலா, மோல்டோவா, ஸ்லோவேகியா, அங்கோலா, காங்கோ, டிஜிபவுட்டி, இலங்கை, லாவோஸ், ஈராக், கென்யா, மொராக்கோ, ஜோர்டான், நமீபியா, அசர்பைஜான், பிலிப்பைன்ஸ், கேமரூன், சியசீல்ஸ், மொரிஷியஸ், வியட்நாம், ஆன்டிகுவா, பார்புடா, மாலி மற்றும் பானாமாவை தொடர்ந்து 60 வது நாடாக, ஸ்புட்னிக் - வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி அளித்து உள்ளது. இந்தியாவின் முடிவுக்கு, இந்த மருந்தை துடுப்பு மருந்தை தயாரிக்கும் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் 850 மில்லியன் டோஸ்கள் இந்த மருந்து உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் குறைந்தளவு மருந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் இங்கே பற்றாக்குறையை பயன்படுத்தி ஆதாயம் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ததாக பெருமை பட்டுக் கொண்டோம் இப்போது "உரிய நேரத்தில்" இறக்குமதி செய்வதாக பெருமைப் பட்டுக் கொள்கிறோம்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
13-ஏப்-202115:01:16 IST Report Abuse
Vena Suna எல்லோர்க்கும் இலவசமாக போடுங்கள்...நாம் பல நாடுகளுக்கு இலவசமாக அல்லவே வழங்குகிறோம்? தடுப்பூசி திருவிழு என்று சொல்வது நல்ல இல்லை....சாமியை கும்பிட தான் திருவிழா...ன்னு சொல்லனுங்க...
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
13-ஏப்-202111:32:51 IST Report Abuse
ShivRam ShivShyam மிக சரியான நேரத்தில் எடுத்த நல்ல முடிவு.. கூடிய விரைவில் மேலும் ரெண்டு தடுப்பூசிகள் அங்கீகாரம் கிடைக்கும் நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு மருந்து கிடைக்க ஏதுவாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X