கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும்: டெட்ராஸ் அதானம்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
ஜெனிவா: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ். இவர் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம்குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.உலகம் முழுக்க கிட்டத்தட்ட 29 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கி உள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தற்போது இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக தற்போது
WHO, CoronaVirus, TedrosAdhanom, உலக சுகாதார அமைப்பு, கொரோனா, வைரஸ், டெட்ராஸ் அதானம்

ஜெனிவா: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ். இவர் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம்குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

உலகம் முழுக்க கிட்டத்தட்ட 29 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கி உள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தற்போது இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக தற்போது தடுப்பு மருந்துகள் உலகெங்கிலும் அதிகமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.13 கோடியே 65 லட்சம்பேர் தற்போதுவரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உலகம் முழுவதும் தற்போது 780 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தாக்கத்தின் அழிவில் இருந்து உலகம் வெகு தொலைவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ். உலக மக்களின் முழு ஆதரவுடன் கொரோனாவின் தாக்கத்தை நாம் படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


latest tamil news



கடந்த ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனாவின் தாக்கம், இரண்டாவது அலை காரணமாக பல ஆசிய மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் மீண்டும் அதிகரித்தது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ, முகக் கவசம் அணிய மக்களை வலியுறுத்துதல், சமூக விலகலை பின்பற்றுதல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளித்தல், தடுப்பு மருந்தை விரைவில் பொதுமக்களுக்கு செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக உலக நாடுகள் தற்போது தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவும் வேகத்திற்கு தற்போது உலகில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் வேகம் குறைவாகவே உள்ளது என்று அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை.

இது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இறப்பு சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளது, மனிதகுலத்துக்கு சாதகமான விஷயம். ஒரு கட்டத்தில் இந்த வைரஸ் தாக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி விடலாம் என்ற நம்பிக்கையை இது தருகிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார். ஜெனிவாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் உலக சுகாதார அமைப்பு தனது கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பு மருந்துகளை இலவசமாக விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஏப்-202122:50:04 IST Report Abuse
ஆப்பு குப்பை அள்ளுபவர்களை யாரும் நெருங்குவதில்லை.சமூக இடைவெளி கிடைக்கிறது. அவர்களால் நோய் பரவ வாய்ப்பு குறைவே.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-ஏப்-202122:39:10 IST Report Abuse
Ramesh Sargam உண்மை. ஆனால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மருத்துவர்களின் அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றினால் கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
13-ஏப்-202122:12:01 IST Report Abuse
PRAKASH.P When China will be punished?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X