தேர்தல் கமிஷனை கண்டித்து மம்தா தர்ணா

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (82+ 48)
Share
Advertisement
புதுடில்லி : தேர்தல் நடத்தை விதிகளை மீறிய, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, 24 மணி நேரத்திற்கு பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து, தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் கோல்கட்டாவில் தர்ணா செய்தார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சியில் உள்ளது. இங்கு, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல்
Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி

புதுடில்லி : தேர்தல் நடத்தை விதிகளை மீறிய, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, 24 மணி நேரத்திற்கு பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து, தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் கோல்கட்டாவில் தர்ணா செய்தார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சியில் உள்ளது. இங்கு, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு, வரும், 17ல் நடக்கிறது. இதற்கிடையே, பிரசாரத்தின்போது முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ள மத்திய பாதுகாப்புப் படையினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின்படி செயல்பட்டு வருவதாக, சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

மற்றொரு பிரசாரத்தின்போது, மத அடிப்படையில் பேசி, ஓட்டு சேகரித்ததாக புகார் எழுந்தது.

தேர்தல் கமிஷனை கண்டித்து மம்தா தர்ணா

இது குறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, முதல்வர் மம்தாவுக்கு, 24 மணி நேரத்திற்கு பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து, நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, இன்று இரவு, 8:00 மணி வரை, அவரால் பிரசாரம் செய்ய முடியாது.


latest tamil news



தனக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா, கோல்கட்டாவில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து மம்தா போராட்டம் நடத்தினார்.


பா.ஜ., நிர்வாகிக்கு தடை


இதனிடையே, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், பா.ஜ., நிர்வாகி ராகுல் சின்ஹாவிற்கு 2 நாள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது. கூச்பெஹாரில் 4 பேருக்கு பதில் 8 பேரை சுட்டு கொன்றிருக்க வேண்டும் அவர் பேசியதாக புகார் கூறப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (82+ 48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202122:33:20 IST Report Abuse
Rajagopal இதுகளுக்கெல்லாம் கொரோனா ஏன் வந்து சுடுகாட்டுக்கு அனுப்ப மாட்டேங்குது?
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
13-ஏப்-202121:28:12 IST Report Abuse
Milirvan நமக்கும் பொழுது போக வேண்டாமா..? அழகன் படத்தில் ஒருவர் காலில் கட்டு போட்டுக்கொண்டு சொந்தக்காரன் என்று கூறி வீட்டில் புகுந்து ஓசி சோறு கட்டு கட்டுன்னு கட்டுவார்.. நம்ம தீதியும் நான் பங்காலி'ன்னு சொல்லி கால்ல கட்டு போட்டுக்கிட்டு அந்த ஸ்டேட்'ஐயே சுத்தி சுத்தி வர்றார்.. ஹி..ஹி..
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
13-ஏப்-202121:23:39 IST Report Abuse
bal மக்களின் வாழ்க்கையை வீணடித்த பொம்பள..சிங்குரில் நானோ கார் தொழிலை தடுத்து அந்த ஊர் மக்களுக்கு நிலமும் பணமும் திரும்பவும் கிடைக்கவில்லை...காரணம் இந்த பொம்பள..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X