பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஏப்., இறுதியில் பயன்பாட்டிற்கு வருகிறது ‛ஸ்புட்னிக்-வி'

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: ரஷ்யா கண்டுபிடித்த, ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்தி கொள்ள, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் அளித்தது. இந்த மருந்தை இந்தியாவில் 5 நிறுவனங்கள் இணைந்து ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ் அளவுக்கு உற்பத்தி செய்ய உள்ளன. ஏப்., மாத இறுதியில், இந்த மருந்தானது, குறைந்தளவு பயன்பாட்டிற்கு வர உள்ளது.இந்த தடுப்பூசியை,
Sputnik V, Doses,India,  Annually

புதுடில்லி: ரஷ்யா கண்டுபிடித்த, ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்தி கொள்ள, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் அளித்தது. இந்த மருந்தை இந்தியாவில் 5 நிறுவனங்கள் இணைந்து ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ் அளவுக்கு உற்பத்தி செய்ய உள்ளன. ஏப்., மாத இறுதியில், இந்த மருந்தானது, குறைந்தளவு பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இந்த தடுப்பூசியை, தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த, 'டாக்டர் ரெட்டிஸ்' நிறுவனம் தயாரித்து வினியோகிக்க உரிமம் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசியானது91.6 சதவீதம் பலன் அளிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம், இந்தியாவில் 3 கட்ட பரிசோதனைகளை முடித்து உள்ளது. தொடர்ந்து, அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தது. இதனை பரிசீலனை செய்த நிபுணர் குழு நேற்று ஒப்புதல் வழங்கியது. இன்று 60வது நாடாக, டிசிஜிஐ அனுமதி வழங்கியது.

இந்த மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்காக கிளாண்ட் பார்மா, ஹெடீரோ பயோ பார்மா, பனீசியா பயோடெக், ஸ்டெலிஸ் பயோ பார்மா, விர்சவு பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன், ஸ்புட்னிக்-வி மருந்தை கண்டுபிடித்த ரஷ்யா நேரடி முதலீட்டு வாரியம்(ஆர்டிஐஎப்) ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்க 850 மில்லியன் டோஸ் மருந்து உற்பத்தி செய்ய உள்ளது.


latest tamil news



இது தொடர்பாக ஆர்டிஐஎப் சிஇஓ கிரில் டிமிட்ரிதேவ் கூறியதாவது:
இந்த தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ள அனுமதி கொடுத்த அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. தற்போது 60 நாடுகளில் அனுமதி கிடைத்துள்ளது. அங்கு 30 கோடி பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. முதல் டோஸ் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத துவக்கத்தில் விநியோகம் செய்யப்படும். நிச்சயம் மே மாதத்தில் தடுப்பூசி கிடைக்கும். இந்தியாவில், தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய 5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
இன்னும் ஒரு சில மாதங்களில் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். இதனால், இந்தியாவில் ஜூன் மாதத்தில் உறு்பத்தி நல்ல நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தில் நாங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம் என எதிர்பார்க்கிறோம். பைசர் மற்றும் ஆஸ்ட்ரஜெனகா நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அடுத்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அதிகம் பேர் விரும்புகின்றனர்.


உலகம் முழுவதும் 425 மில்லியன் பேருக்கு



அதிக திறன் பெற்ற தடுப்பூசியை பெற காத்திருக்கு தயாராக உள்ளதாக 10 ல் 9 பேர் கூறுகின்றனர். தடுப்பூசி உற்பத்திமையமாக இந்தியா திகழ்கிறது. உற்பத்திக்கு சிறந்த கூட்டாளியாகவும் திகழ்கிறது. நாங்கள் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், இந்திய மக்கள் தொகைக்கு ஏற்பவும், உலக நாடுகளின் விநியோகத்திற்கு ஏற்பவும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யும். இந்தியாவில் ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யப்படுவதுடன். உலகம் முழுவதும் 425 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். இந்தியாவில் 57 சதவீதம் பேர் ஸ்புட்னிக் வி தடுப்பூசி குறித்தும், 55 சதவீதம் பேர் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிகுறித்தும் 44 சதவீதம் பேர் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசி குறித்தும் அறிந்து வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202116:32:40 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN "'இந்த தடுப்பூசி, 2 முதல், 8 டிகிரி செல்ஷியஸ் தட்பவெப்ப நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்' என, நிபுணர்கள் தெரிவித்தனர்." இந்தியாவில் இது சாத்தியமா ?
Rate this:
13-ஏப்-202119:23:00 IST Report Abuse
ஆரூர் ரங்இப்போது இங்கு போடப்படும் மற்ற தடுப்பூசிகளும் இதே வெப்பநிலையில் 🤙தான் பாதுகாக்கப்படுகின்றன...
Rate this:
Cancel
13-ஏப்-202113:28:53 IST Report Abuse
மஞ்சு அடுத்து சீனாவிடம் வாங்கவேண்டும் ஆனால் உலகமே மோடியின் தடுப்பூசி வேண்ட காத்திருக்கின்றன என்று வாயில வடை சுடுகிறது இதில
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
14-ஏப்-202106:46:45 IST Report Abuse
Nallavan Nallavanபொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X