பொது செய்தி

இந்தியா

" சுடுகாட்டிலும் இடமில்லை "- நீண்ட வரிசையில் பிணங்கள்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக வட மாநிலங்களில் உயிர்ப்பலி அதிகரித்து வருவதால் பிணங்களை எரிக்க பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சுடுகாட்டில் பிணங்கள் வரிசையாக காத்து இருக்கும் பரிதாப காட்சிகள் அனைவரையும் கவலை அடைய செய்துள்ளது. பல இடங்களில் நதிக்கரை களில் திறந்த வெளியில் பிணங்கள் எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வட மாநிலங்களின் 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்
கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, வட மாநிலங்கள், இறப்புகள், சடலங்கள்,

புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக வட மாநிலங்களில் உயிர்ப்பலி அதிகரித்து வருவதால் பிணங்களை எரிக்க பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சுடுகாட்டில் பிணங்கள் வரிசையாக காத்து இருக்கும் பரிதாப காட்சிகள் அனைவரையும் கவலை அடைய செய்துள்ளது. பல இடங்களில் நதிக்கரை களில் திறந்த வெளியில் பிணங்கள் எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வட மாநிலங்களின் 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களை எரியூட்ட மின் தகன மேடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலின் 2-ஆவது அலை அச்சமூட்டம் வகையில் அதிகரித்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 1.5 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டி பதிவாகிறது. அவர்களில் பலர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளனர். வட மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. சத்தீஸ்கரின் 28 மாவட்டங்களில் 20-லும், மஹாராஷ்டிராவில் 36 மாவட்டங்களில் 12-லும், மத்திய பிரதேசத்தில் 52 மாவட்டங்களில் 13-லும், பஞ்சாபில் 22 மாவட்டங்களில் 8-லும் படுக்கைகள் இல்லை.


latest tamil news
தற்காலிக தகன இடங்கள்!


இந்த மாவட்டங்களில் சிலவற்றில் தீவிர நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் ஊசி மற்றும் ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லக்னோ மற்றும் ராய்ப்பூர் நகரங்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. எனவே மாநகராட்சி ஊழியர்கள் அதிக மின் தகன இடங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் 35 தற்காலிக தகன இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 6 தகன இடங்களுக்கு பிற மாவட்டங்களில் அனுமதி வழங்கியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் இறப்பு விகிதம் 0.4% ஆக உள்ளது. அங்கும் உடல்களை தகனம் செய்ய அதிகாரிகள் சிரமப்படுகிறார்கள்.


வரிசைக் கட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள்latest tamil newsகுஜராத்தின் சில பகுதிகளில் திறந்தவெளியில் நிறைய சடலங்கள் எரிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆமதாபாத் மருத்துவமனை வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுடன் அணிவகுத்து நிற்கும் அதிர்ச்சி காட்சிகளும் வெளியாகியுள்ளது. பஞ்சாபிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது. லூதியானாவில் 89% ஐ.சி.யூ., படுக்கைகள் நிரம்பிவிட்டன. இந்த எண்ணிக்கை மொஹாலியில் 80% ஆகும். ஹோஷியார்பூரில் 98% ஆக உள்ளது.

மத்திய பிரதேசத்திலும் ஆபத்தான நிலைமை என்கின்றனர். இந்தூர் மற்றும் போபால் பாதிப்பில் முதலிடத்தில் உள்ளன. இரு இடங்களிலும் இறந்தவர்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத அரசு கட்டிடங்களை தற்காலிக கொரோனா மருத்துவமனைகளாக மாற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு உள்ளது என பெயர் குறிப்பிடாமல் சில அதிகாரிகள் கூறியுள்ளனர்.


latest tamil newsஉலகளவில், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 59 ஆயிரத்து 765 பேர் பலியாக உள்ளனர். சமீபத்தில், பிரேசிலில் வைரஸ் தொற்று அதிகம் தாக்கி உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 4,195 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
14-ஏப்-202120:44:41 IST Report Abuse
oce குரோனா அதிகமாக பரவாத இடங்கள் சாதாரண வீடுகள் கீற்று கொட்டகைகள் ஓட்டு வீடுகள் தரைத்தள வீடுகள் ஆகியவைகளில் குரோனா வராது. அங்கே எல்லாம் வவ்வால்கள் குடி இருப்புகளுக்கு வசதி இல்லை.குரோனாவின் பல அலைகள் பெருக்கம் அந்தந்த ஏரியாக்களில் உள்ள உயர்ந்த கட்டிடங்கள் கோபுரங்கள் என அனைத்திலும் தங்கி பெருகியுள்ளன வவ்வால் கூட்டத்தை அழித்தால் குரோனா படராது. வீட்டில் கரப்பான் பூச்சிகளுக்கு தெளிக்கும் மருந்தை மரப்பொந்துகள் வீடுகளில் மூலை முடுக்குகள் என எங்கெங்கு குரோனா பரவலுக்கு காரணமான வவ்வால் கூட்டம் உள்ளதோ அந்த இடங்களில் ஸ்பிரே பண்ணலாம். நாட்டில் பெருகியுள்ள மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் வவ்வால்களின் பெருக்கத்திற்கு காரணமாக இருக்கும். ஓரிடத்தில் கிளம்பும் தீ பல இடங்களுக்கும் பரவுவது போல் குரோனா பரவுகிறது.
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
14-ஏப்-202106:31:42 IST Report Abuse
Elango அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டனர்... இனி மக்கள் எக்கேடு கேட்டால் என்ன ??? நம் உயிர் மற்றும் நம் குடும்பத்தாரின் உயிர் நம் கையில் மக்களே கவனம் தேவை..
Rate this:
Balaji - Chennai,இந்தியா
14-ஏப்-202108:31:30 IST Report Abuse
Balajiஎப்படி இப்படி எல்லாம் பேத்த முடிகிறது? தடுப்பூசி வைத்துக்கொண்டு வா வா என்று கூவி அழைத்தும் மக்கள் போக வில்லை என்பதே உண்மை......
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202122:31:47 IST Report Abuse
Rajagopal சீமான் மட்டும் பிரதம மந்திரியா இருந்திருந்தா இந்நேரம் எல்லாருக்கும் ஒரே சமயத்துல ஊசி போட்டுருப்பாரு. அப்பால செத்த ஒவ்வொத்தனுக்கும் அவரே வந்து விறகு அடுக்கி கொள்ளி போட்டுருப்பாரு. ஒருத்தனுக்கும் கடன் கெடயாது. அவர பிரதமராக்குங்க மொதல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X