பொது செய்தி

இந்தியா

சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்படுமா - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுப்பற்றி டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்த கருத்து டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக வீச தொடங்கி உள்ளது. நாள் ஒன்று 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க பல்வேறு நடிக்கைகள்
CBSE, cancelboardexams2021, DelhiCM

புதுடில்லி : கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுப்பற்றி டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்த கருத்து டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக வீச தொடங்கி உள்ளது. நாள் ஒன்று 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க பல்வேறு நடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதோடு தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் மாணவர்களின் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என்ற அறிவிப்பு வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்வு மட்டும் அடுத்தமாதம் நடைபெற இருக்கிறது. அதேசமயம் சிபிஎஸ்இ., தேர்வுகளை நடத்துவதில் மத்திய கல்வி அமைச்சகம் உறுதியாக உள்ளது.


latest tamil newsகொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலும் சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அவர் கூறுகையில், ‛‛டில்லியில் மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். ஒரு லட்சம் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தற்போதைய சூழலில், இவை பெரிய அளவிலான கொரோனா பரவலுக்கு வழிவகுக்கலாம். குழந்தைகளின் வாழ்க்கையும், ஆரோக்கியமும் எங்களுக்கு மிகவும் முக்கியம். தேர்வுகளை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் முறை அல்லது இன்டெர்னல் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களை புரமோட் செய்யலாம். எனக்கு கிடைத்த தகவல் படி , கடந்த 24 மணி நேரத்தில் 13,500 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது பரவி வரும் வைரஸ் இளைஞர்களை தான் அதிகம் தாக்கி வருகிறது'' என தெரிவித்துள்ளார்.


latest tamil newsஅரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டி சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யணும் என்ற கோரிக்கை சமூகவலைதளமான டுவிட்டரிலும் எதிரொலிக்கிறது. பல லட்சம் பேர் தேர்வை ரத்து செய்ய சொல்லி கேட்டுள்ளனர். இதனால் டுவிட்டரில் #CBSE, #DelhiCM, #cancelboardexams2021 உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின. இதுதொடர்பாக சிலர் பதிவிட்ட கருத்துக்களை பார்க்கலாம்.
* சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏன் மத்திய அரசு இந்த விஷயத்தில் மவுனமாக உள்ளது. இதுப்பற்றி கண்டுகொள்ளாதது ஏன்.
* சிபிஎஸ்இ-யே கொஞ்சம் சிந்தித்து பார். நிறைய மாணவர்களின் வீட்டில் வயதான தாத்தா, பாட்டி உள்ளனர். ஒருவேளை மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, அது அப்படியே அந்த குடும்பத்தினருக்கும் பரவினால் என்ன செய்வது. குறிப்பாக வயதானவர்கள் என்ன செய்வார்கள்.


latest tamil news* இந்தியா கொரோனா எனும் கொடிய வைரஸிடம் போராடி வருகிறது. இந்த தருணத்தில் மாணவர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம். தயவு செய்து சிபிஎஸ்இ., தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
* நான் சிபிஎஸ்இ மாணவன் அல்ல. ஆனால் இந்த விஷயத்தில் மாணவர்களுக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்கும் நேரம் இது. ஏற்கனவே கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து மாணவர்கள் மன அழுத்தத்தில் தவித்து வருகின்றனர். தயவு செய்து தேர்வை ரத்து செய்யுங்கள்.
* மாணவர்கள் நிச்சயம் கொரோனா அல்லது மன அழுத்தத்தால் கொல்லப்படுவார்கள். அதற்கு சிபிஎஸ்இ வழிவகை செய்கிறது என நான் நினைக்கிறேன்.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
13-ஏப்-202121:40:42 IST Report Abuse
J.Isaac தமிழ் நாடு அரசும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாணவர்களின் உயிர், மற்றும் வாழ்க்கை பிரச்சனை. மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். தைரியமாக தேர்வு எழுத முடியாது. +2தேர்வும், நீட் தேர்வும் நடத்த ஏன் அரசு இவ்வளவு அவசரப்படுகிறது என்று புரியவில்லை
Rate this:
Cancel
Ela -  ( Posted via: Dinamalar Android App )
13-ஏப்-202120:52:41 IST Report Abuse
Ela பன்னிரண்டாம் வகுப்பு தவிர, மற்ற தேர்வுகளை ரத்து செய்து, முந்தைய மதிப்பெண்களின் ஆவரேஜ் படி தேர்ச்சி அறிவிக்க வேண்டும். மத்திய அரசு, இதில் அலட்சியம் கூடாது. உடல்களை எரிக்க இடமில்லா நிலையில், தேர்வு ஒரு கேடா?
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
13-ஏப்-202118:56:38 IST Report Abuse
sahayadhas உயிர் இல்லாமல் ஏது எதிர்காலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X