மே.வங்கத்தில் பா.ஜ., வலிமையாக இருந்தாலும் வெல்ல முடியாது: பிரசாந்த் கிஷோர்| Dinamalar

மே.வங்கத்தில் பா.ஜ., வலிமையாக இருந்தாலும் வெல்ல முடியாது: பிரசாந்த் கிஷோர்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (74)
Share
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பா.ஜ., வலிமையாக இருந்தாலும், தேர்தலில் அக்கட்சி தோல்வியை சந்திக்கும் என திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக உள்ள பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக உள்ள பிரசாந்த் கிஷோர், சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சிலருடன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பானது.
WestBengalElections, PrashantKishor, BJP, FormidableForce, பிரசாந்த் கிஷோர், மேற்குவங்கம், பாஜக

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பா.ஜ., வலிமையாக இருந்தாலும், தேர்தலில் அக்கட்சி தோல்வியை சந்திக்கும் என திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக உள்ள பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக உள்ள பிரசாந்த் கிஷோர், சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சிலருடன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பானது. அதில், ‛மே.வங்கத்தில் பா.ஜ., நிச்சயம் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் பெறும்,' என பேசியிருந்தார். அங்கு தற்போது நடந்து வரும் சட்டசபை தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சிக்கு இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார்.


latest tamil news


அவர் கூறியதாவது: மேற்குவங்கத்தில் பா.ஜ., ஒரு வலிமையான அரசியல் சக்தி தான். அதன் வீச்சை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால், இந்தத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிதான் அங்கு ஆட்சியைப் பிடிக்கும். பா.ஜ., 100 இடங்களைத் தாண்டாது என்றுதான் அந்த உரையாடலில் கூறியிருந்தேன். ஆனால் பா.ஜ., வலிமையாக இருக்கிறது என்று நான் சொன்னது மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. பா.ஜ., வலிமையாக இருந்தாலும் மேற்குவங்கத் தேர்தலில் அது தோல்வியை சந்திக்கும் என நான் கூறியது கருத்தில் கொள்ளப்படவில்லை.

ஒரு தேர்தல் வியூக வகுப்பாளராக எனது எதிரியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. மேற்குவங்கத்தில் கள ஆய்வு மோடிக்கு ஆதரவு 40 சதவீதம் என்று தெரிந்தது. பா.ஜ.,வுக்கு கிடைக்கும் வாக்குகளுக்கு பிரதமர் மோடி மீதான அபிமானமே முக்கியக் காரணம். இதன் அடிப்படையிலேயே நான் அந்தக் கருத்தைக் கூறினேன். 2015ல் ஐபேக் துவங்கப்பட்டதில் இருந்தே நாங்கள் பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளுக்காகவே கொள்கை வகுத்துக் கொடுக்கிறோம். இந்தத் தேர்தலில் திரிணமுல் ஆட்சியைத் தக்கவைக்காவிட்டால் நான் எனது பணியிலிருந்தே விலகிக் கொள்கிறேன்.


latest tamil news


வலிமையாக இருப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் வாங்குவங்கி 45 சதவீதத்துக்கும் மேலானது. அதனால் அக்கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அக்கட்சிக்கு எதிரான அலையை கணிக்க முற்பட்டபோது அது மிகமிகக் குறைவாகவே இருந்தது. அதுவும் குறிப்பிட்ட சில பிரமுகர்களைச் சார்ந்தே இருந்தது. மேற்குவங்கத்தில் இன்னமும் மம்தா பானர்ஜி மக்களின் அன்பை, மதிப்பை, நம்பிக்கையைப் பெற்ற தலைவராகவே இருக்கிறார். அதுவும் அவர் பெண்களின் அபிமானம் பெற்ற தலைவராக இருக்கிறார். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X