பொது செய்தி

தமிழ்நாடு

கோயிலில் திருமண விழாக்களுக்கு கட்டுப்பாடு

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: கோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, கோயிலில் நடக்கும் திருமணங்களில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும், கோயிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் திருமணங்களில் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா
கோயில், திருமணம், கோவில், கட்டுப்பாடு,

சென்னை: கோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, கோயிலில் நடக்கும் திருமணங்களில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும், கோயிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் திருமணங்களில் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு கடந்த 10ம் தேதி முதல் தடை விதிக்கப்ப்பட்டுள்ளது. கோயில்களில், பொது மக்கள் வழிபாடு இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படும். எனினும் கோயில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோயில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.


latest tamil news


கோயிலில் நடக்கும் திருமணங்களில் 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் அதற்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். 50 நபர்களுக்கு மட்டும் அனுமதித்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raju - CHENNAI,இந்தியா
13-ஏப்-202121:24:24 IST Report Abuse
raju மசூதிகள், தேவாலயங்கள் இவற்றில் கட்டுப்பாடுகள் இருக்கிறதா
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
13-ஏப்-202120:40:34 IST Report Abuse
bal இந்த அரசியல் வாதிங்க...தேர்தலுக்கு ஆயிரக்கணக்கான மக்களை கூட்டினார்..அப்போதில்லாத கட்டுப்பாடு இப்போது எதற்கு...மக்களுக்கு உதவி செய்யாத அரசியல்வாதிகளை துரத்துங்கள்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
13-ஏப்-202117:31:27 IST Report Abuse
தமிழ்வேள் இந்துக்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு ..இளிச்சவாயர்கள் இந்துக்கள் மட்டுமே ...தப்லீக் கும்பல் , பாவ மன்னிப்பு கும்பல் எத்தனைபேர் வேண்டுமானாலும் கூடலாம் கொரோனா பரப்பலாம் கட்டுப்பாடுகள் பற்றி கேள்வி கிடையாது ...நல்ல மதசார்பின்மை .....
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
13-ஏப்-202118:29:47 IST Report Abuse
Hariவிடுங்க பாஸ் பொறுத்தார் பூமி ஆழ்வார்....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஏப்-202120:11:51 IST Report Abuse
தமிழவேல் கும்பமேளாவில் மாற்று மதத்தினரா கலந்து கொண்டார்கள் ?...
Rate this:
14-ஏப்-202120:20:20 IST Report Abuse
sakthi shanmugamகூடி கும்மாளம் அடித்து கொண்டுதான் இருக்கிறார்கள்அவர்களுக்கெல்லாம் கட்டுப்பாடு இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X