பொது செய்தி

தமிழ்நாடு

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: சித்திரை முதல் தேதி ( ஏப்.,14), ஆடிப்பெருக்கு (ஆக.,3) மற்றும் தைப்பூசம் (2022 ஜன.,18) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பொது மக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த
மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம்

சென்னை: மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: சித்திரை முதல் தேதி ( ஏப்.,14), ஆடிப்பெருக்கு (ஆக.,3) மற்றும் தைப்பூசம் (2022 ஜன.,18) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பொது மக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும். அந்த நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

அந்த விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற பதிவுத்துறை தலைவரின் கோரிக்கையை பரிசீலனை செய்து ஏப்.,14, ஆக.,3 மற்றும் 2022 ஜன.,18 ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ள வேண்டும். அந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news



Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) வருகின்ற வருமானம் எல்லாத்தையும் பெட்டி, பெட்டியாக கொள்ளையடிக்கும் கும்பலை தடுக்கவில்லை என்றால் எந்த வழியில் அரசுக்கு வருமானம் வந்தும் பிரயோஜனமில்லை
Rate this:
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
14-ஏப்-202115:59:48 IST Report Abuse
Subramanian Sundararaman செவ்வாய் கிழமை பத்திர அலுவகங்களுக்கு விடுமுறை அளித்து ஞாயிற்று கிழமை வேலை நாளாக அறிவிக்கலாம் .மங்கள நாளாக கருதும் மக்களின் நம்பிக்கைக்கு அபராதம் போடுவது போல உள்ளது .
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
14-ஏப்-202108:09:18 IST Report Abuse
தல புராணம் 100% நாட்களிலும் லஞ்சம் அதே பெர்சண்டு தான்.. பீலா ராஜேஷ் - கொரோனாவிலே கொள்ளையடிச்சி கோலாகலாமா பங்களா கட்டிய ஊழல் பீலா.. அந்த உல்லாச பாலியல் வக்கிரன் ராஜேஷ் தாஸ் மனைவி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X