பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக உள்ளதால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்
Centre, FastTracks, Emergency Approvals, ForeignVaccines, CovidVaccine, கொரோனா, வைரஸ், தடுப்பூசி, அனுமதி

புதுடில்லி: வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக உள்ளதால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து இருப்பதால் சில மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவசர கால பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா நோய் பரலைக் விரைவாக கட்டுப்படுத்த தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. உலக சுகாதார மையத்தால் அங்கிகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், வெளிநாட்டு தடுப்பூசி செலுத்தப்படும் முதல் 100 பேரை, 7 நாட்களுக்கு கண்காணித்து பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஏப்-202114:22:06 IST Report Abuse
ஆப்பு இது ராஜ தந்திரம். ஆத்மநிர்பரா. அமெரிக்கா மூலப் பொருள் தரலேன்னா ரஷ்யா கிட்டே வாங்குவோம். ரஷ்யா முறைச்சுக்கிட்டா சீனா கிட்டே வாங்குவோம். சீனா வோட சண்டை வந்தாலும் இறக்குமதி செய்வோம்.
Rate this:
Cancel
14-ஏப்-202102:09:20 IST Report Abuse
ஆப்பு தடுப்பூசி ஆலைகளை ஆய்வு செய்ய அவுரு மட்டும் தனியே போயி மெடல் வாங்கி குத்திக்குவாரு. இப்போ ரிஸ்கியான அனுமதிக்கு சுகாதார அமைச்சகத்தை தாட்டி உட்டுருவாரு. பொறகு மருந்து வேலை செஞ்சா நாந்தான் குடுக்கச் சொன்னேம்பாரு. ஊத்திக்கிச்சுன்னா அடிப்பொடிகள் கருத்து சொல்வார்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-ஏப்-202119:48:54 IST Report Abuse
Ramesh Sargam வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு முன்பு, அவைகள் பாதுகாப்பானவையா என்று பரிசோதித்து பின்பு பயன்படுத்தவேண்டும். அப்புறம் ஏதாவது பிரச்சினை ஏட்பட்டால், அதை வைத்து நமது அரசியல்'வியாதிகள்' கிளர்ச்சி செய்ய கிளம்பிவிடுவார்கள்.
Rate this:
14-ஏப்-202120:34:22 IST Report Abuse
ஆப்புஅதெப்படி... நம்மள மாதிரி ஆளுங்க மீதுதானே சோதனை செஞ்சு பாதுகாப்பானதான்னு பாக்க முடியும். அப்பிடித்தானே களப்பணியாளர்களுக்கு முன்னாடி போட்டு சேஃபானதுன்னு தெரிஞ்சு பெரியவங்க போட்டுக்கிட்டாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X