பொது செய்தி

இந்தியா

தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், தற்போது வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 13,10,90,000 டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், கேரளாவில் தடுப்பு மருந்து வீணடிக்கப்படவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் 8 முதல் 9
கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, தடுப்பூசி, மத்திய அரசு

புதுடில்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், தற்போது வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 13,10,90,000 டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், கேரளாவில் தடுப்பு மருந்து வீணடிக்கப்படவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் 8 முதல் 9 சதவீத மருந்துகள் வீணடிக்கப்பட்டு உள்ளன.


latest tamil news


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11.43 கோடி டோஸ் தடுப்பு மருந்து வீணாகி உள்ளது. இன்று காலை 11:00 மணி நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,67,20,000 டோஸ்கள் தடுப்பு மருந்து உள்ளன. இதனை ஏப்ரல் இறுதியில் 2,01,22,960 ஆக அதிகரிக்கப்படும். இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை. அரசுகள் சரியான திட்டமிடுதலுடன் பயன்படுத்தினால், தடுப்பூசிகளுக்க பற்றாக்குறை இருக்காது. தடுப்பூசி போட்டு கொண்டோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85 சதவீதம் குறைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
14-ஏப்-202111:08:50 IST Report Abuse
VENKATASUBRAMANIAN தலபுராணம் போன்றவர்கள் எதற்கு ஊளை இடுகிறார்.
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
14-ஏப்-202109:11:42 IST Report Abuse
Appan Cobaxin எங்கும் இல்லை..எல்லா இடங்களிலும் Coshield தான் உள்ளது..ஏன் ?..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
14-ஏப்-202108:25:23 IST Report Abuse
தல புராணம் // மாநிலங்களில் 8 முதல் 9 சதவீத மருந்துகள் வீணடிக்கப்பட்டு உள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11.43 கோடி டோஸ் தடுப்பு மருந்து வீணாகி உள்ளது // இதுக்கும் நேருவை பழி சொல்ல கெளம்பி வருவாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X