பொது செய்தி

இந்தியா

மஹாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் இன்று(ஏப்.,14) முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ''அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல வேண்டும்'' என முதல்வர்உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்மஹாராஷ்டிராவில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதை அடுத்து இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர்
Maharashtra, Lockdown, 15 day janta curfew, Maharashtra, Lockdown

மும்பை: மஹாராஷ்டிராவில் இன்று(ஏப்.,14) முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ''அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல வேண்டும்'' என முதல்வர்உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்

மஹாராஷ்டிராவில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதை அடுத்து இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:கொரோனா பரவல் மிகவும் ஆபத்தான முறையில் பரவி வருகிறது. நிலைமை மிகவும் அச்சுறுத்துவதாக உள்ளது.


latest tamil news



தொற்றுக்கு எதிரான போரை மீண்டும் துவங்கியுள்ளோம்.மாநிலம் முழுவதும் இன்று முதல் காலை 7:00 - இரவு 8:00 மணி வரை அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் நான்கு பேருக்கு மேல் ஒன்றாக கூட தடை உள்ளது.ரயில் பஸ் போன்ற பொது போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும். ஆனால் மிகவும் அவசியமான வேலைகளுக்கு மட்டும் மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும்.



மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடுகளை சமாளிக்க ராணுவ உதவியை நாடியுள்ளோம். இது குறித்து பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில்ராணுவ உதவியுடன் விமானம் வாயிலாக ஆக்சிஜன் சப்ளைக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஏப்-202123:14:27 IST Report Abuse
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) ஆரம்ப காலத்தில் கொரோன லாக் டவுன் கோட்டை விட்டதன் எதிரொலி இன்றைய மஹாவின் நிலைக்கு காரணம் , வசூல் செய்வதில் காண்பித்த அக்கறை இதில் காண்பித்து இருக்கலாம், வசூல் வைத்து நீங்க ஹாயாக இருக்கலாம், பாவம் உழைத்து உண்பவன்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-ஏப்-202119:44:03 IST Report Abuse
Ramesh Sargam மோதல்ல மக்களின் நலனில் அக்கறை இல்லாத இந்த சேனா அரசு முடக்கப்பட வேண்டும்.
Rate this:
13-ஏப்-202122:36:00 IST Report Abuse
ஆப்புபறந்து பறந்து வந்து பரப்புரைங்கற பேர்ல கொரோனாவை பரப்பியவர்களை குடியரசுத் தலைவர் முடக்குவாரா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X