பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஏப் 13, 2021
Share
Advertisement
ஏப்., 14, 1904மயிலாடுதுறை மாவட்டம், ஆறுபாதியில், 1904 ஏப்., 14ம் தேதி பிறந்தவர், பரசுராம். மாயவரத்தில், அச்சுக்கோர்ப்பாளராக பணிபுரிந்தார். பின், புதுக்கோட்டை தர்மராஜ்பிள்ளையின், 'கண்ணபிரான்' அச்சகத்தில் மேலாளராக பணிபுரிந்தார்.தொடர்ந்து தர்மராஜ்பிள்ளை, அச்சகத்தை பரசுராமிடம் ஒப்படைத்தார். பின் பரசுராமன், அச்சு வடிவில் பல இதழ்களை வெளியிட்டார். தமிழ் நிலைய புத்தக

இதே நாளில் அன்று


ஏப்., 14, 1904



மயிலாடுதுறை மாவட்டம், ஆறுபாதியில், 1904 ஏப்., 14ம் தேதி பிறந்தவர், பரசுராம். மாயவரத்தில், அச்சுக்கோர்ப்பாளராக பணிபுரிந்தார். பின், புதுக்கோட்டை தர்மராஜ்பிள்ளையின், 'கண்ணபிரான்' அச்சகத்தில் மேலாளராக பணிபுரிந்தார்.தொடர்ந்து தர்மராஜ்பிள்ளை, அச்சகத்தை பரசுராமிடம் ஒப்படைத்தார். பின் பரசுராமன், அச்சு வடிவில் பல இதழ்களை வெளியிட்டார். தமிழ் நிலைய புத்தக வெளியீடு மற்றும் குழந்தை இலக்கிய இதழ்களான, 'பாலர் மலர், டமாரம், சங்கு' போன்ற பல இதழ்கள், நேர்த்தியாக வெளியிடப்பட்டன. மேலும், இலக்கிய வட்ட தொட்டியாகவும், தன் அச்சகத்தை மாற்றினார்.
'டிங்டாங்' என்ற சிறுவர் பத்திரிகையை துவக்கி, பல ஆண்டுகள் நடத்தினார். இவர் அச்சகத்தில், பல்வேறு பத்திரிகைகளும் அச்சிடப்பட்டன. அதனால், பல எழுத்தாளர்கள் வெளிச்சத்திற்கு வந்தனர்.இவரைப் பற்றி, 'பதிப்பு உலகம் போற்றும் பரசுராம்' என்ற தலைப்பில், புத்தகம் வெளியாகி உள்ளது. 1987 ஆக., 25ல், தன், 83வது வயதில் காலமானார்.
'அச்சுக்கலை வித்தகர்' புதுக்கோட்டை எஸ்.பரசுராம், பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X