பொது செய்தி

தமிழ்நாடு

வேளச்சேரி தொகுதியில் 17ம் தேதி, மறு ஓட்டுப்பதிவு

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: 'வேளச்சேரி சட்டசபை தொகுதியில், 92வது ஓட்டுச்சாவடியில் மட்டும், வரும், 17ம் தேதி, மறு ஓட்டுப்பதிவு நடக்கும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், இம்மாதம், 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு மிக அமைதியாக நடந்து முடிந்தது.சென்னை, வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட, 92வது ஓட்டுச் சாவடியில், இரண்டு ஓட்டுப்பதிவு
வேளச்சேரி, வாக்குச்சாவடி, ஏப்ரல் 17, மறு ஓட்டுப்பதிவு

சென்னை: 'வேளச்சேரி சட்டசபை தொகுதியில், 92வது ஓட்டுச்சாவடியில் மட்டும், வரும், 17ம் தேதி, மறு ஓட்டுப்பதிவு நடக்கும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், இம்மாதம், 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு மிக அமைதியாக நடந்து முடிந்தது.சென்னை, வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட, 92வது ஓட்டுச் சாவடியில், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் எந்த சின்னத்திற்கு ஓட்டளித்தோம் என்பதை அறியும், ஒரு, வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தையும், தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள், இரு சக்கர வாகனத்தில், எடுத்துச் சென்றனர். சந்தேகமடைந்த பொதுமக்கள், அவர்களை பிடித்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர்.ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு துவங்கி, 50 நிமிடங்களுக்கு பின், வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தில், பழுது ஏற்பட்டுஉள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த இயந்திரத்தை அகற்றிவிட்டு, புதிய வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தை பயன்படுத்தினர்.

பழுதடைந்த வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தில், 15 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அதை ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லாமல், பயன்படுத்தப்படாத ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் சேர்த்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்ட அறைக்கு எடுத்து சென்றது, விசாரணையில் தெரிய வந்தது.


latest tamil news



தேர்தல் விதிமுறைகளின்படி, எந்த இயந்திரத்தையும், நான்கு சக்கர வாகனத்தில், போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்ல வேண்டும். அதை மீறி இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றது விதி மீறல். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த ஓட்டுச்சாவடியில், மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என, அத்தொகுதி காங்., வேட்பாளர் ஹசன் மவுலானா, தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர் ஆகியோர், தேர்தல் கமிஷனுக்கு, அறிக்கை அளித்தனர். அதில், 92வது ஓட்டுச்சாவடியில், விதி மீறல் நடந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த ஓட்டுச்சாவடியில் மட்டும், வரும், 17ம் தேதி, காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, மறு ஓட்டுப்பதிவு நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

அன்றைய தினம், ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மறு ஓட்டுப்பதிவு விபரத்தை, வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
14-ஏப்-202116:42:43 IST Report Abuse
vnatarajan அந்த மூன்று பெரும் யார். அவர்களுக்கு பின்னால் இருந்து அவர்களை இயக்கியவர்கள் யார் யார் என்கிற விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் . பூத் தலைமை நிர்வாகி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்பதையும் தெரிவிக்கவேண்டும். .
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
14-ஏப்-202108:05:47 IST Report Abuse
kosu moolai அவசரப்பட்டு இரண்டுநாள் முன்பு தேர்தல் கமிஷனை சாடியிருந்தார் ஒரு சாப்பாட்டு ராமன்.
Rate this:
Cancel
Ketheesh Waran - Bangalore,இந்தியா
14-ஏப்-202107:21:08 IST Report Abuse
Ketheesh Waran இந்த செயலில் ஈடுபட்டவர்கள் அதிமுகவினர் ஊழல் அதிமுக அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் அல்லது பதவி நீக்கப்படவேண்டும்
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
14-ஏப்-202112:14:38 IST Report Abuse
Srinivas///அதிமுக அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் அல்லது பதவி நீக்கப்படவேண்டும்/// ஏன்? அவர்கள் நல்லதுதானே செய்தனர்? நல்லதை செய்தும் வருகின்றனர். மத்தியில் உள்ளவர்களுடன் சேர்ந்து மக்களுக்கு ''மிக..மிக...நல்லதையே'' செய்துவருகின்றனர். அவர்களுக்கு தெரிந்ததும் இதுபோல் நல்ல விஷயங்கள்தான். அதையேதான் மறுபடியும் செய்வர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X