பொது செய்தி

இந்தியா

தீவிரமாகிறதுகொரோனா பரவல் : ஒரே நாளில் 1.62 லட்சம் பேர் பாதிப்பு

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:நேற்று ஒரே நாளில், 1.62 லட்சம் பேர், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர். இவர்களில், 80 சதவீதம் பேர், தமிழகம், மஹாராஷ்டிரா உட்பட, 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள்.மத்திய சுகாதார அமைச்சகம்,வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த, 24 மணி நேரத்தில், 1.62 லட்சம் பேரிடம் பாதிப்பு கண்டறிப்பட்டு உள்ளது.10
தீவிரம், கொரோனா ,ஒரே நாள்,1.62 லட்சம், பாதிப்பு

புதுடில்லி:நேற்று ஒரே நாளில், 1.62 லட்சம் பேர், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர். இவர்களில், 80 சதவீதம் பேர், தமிழகம், மஹாராஷ்டிரா உட்பட, 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

மத்திய சுகாதார அமைச்சகம்,வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த, 24 மணி நேரத்தில், 1.62 லட்சம் பேரிடம் பாதிப்பு கண்டறிப்பட்டு உள்ளது.10 மாநிலங்கள்இவர்களில், 80.80 சதவீதம் பேர், தமிழகம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், டில்லி, கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் கேரளா ஆகிய, 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மஹாராஷ்டிராவில், 51 ஆயிரத்து, 751 பேரும், உத்தர பிரதேசத்தில், 13 ஆயிரத்து, 604 பேரும், சத்தீஸ்கரில், 13 ஆயிரத்து, 576 பேரும் பாதிப்பிற்கு உள்ளாயினர்.வைரஸ் பரவல் உயர்வால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதன்படி தற்போது, 12.65 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் கடந்த, 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில் அதிபட்சமாக, 258 பேர் உட்பட, 879 பேர் பலியாயினர். இவர்களில், 88.05 சதவீதம் பேர், 10 மாநிலங்களைச் சேர்ந்தோர். ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை, 1.71 லட்சத்தை கடந்துள்ளது.சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர், ஜம்மு - காஷ்மீர், லடாக் உட்பட, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், நேற்று புதிய பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை.


முதலிடம்

நாடு முழுவதும் நேற்று வரை, 10.85 கோடிக்கும் மேற்பட்ட, 'டோஸ்' தடுப்பூசிகள் மக்களை சென்றடைந்துள்ளன. நேற்று ஒரே நாளில், 40.04 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.தினந்தோறும் செலுத்தப்படும் தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை அடிப்படையில், சர்வதேச அளவில் நாம் முதலிடத்தில் உள்ளோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


26 கோடி பரிசோதனைகள்

நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒரு கோடியே, 36 லட்சத்து, 89 ஆயிரத்து, 453 பேரில், 1.22 கோடி பேர் குணமடைந்து உள்ளனர். வைரஸ் பாதிப்பு கண்டறிய, இதுவரை, 26 கோடி பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
14-ஏப்-202108:27:16 IST Report Abuse
amuthan ஒட்டு எண்ணிக்கை முடியும் வரை இப்படி கூடிக் கொண்டு தான் இருக்கும்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-ஏப்-202112:42:52 IST Report Abuse
Visu Iyerரிசல்ட் வரும் வரை.. பதவி ஏற்பு விழாவில் கொரணாவே இருக்காது... காக்கா உஷ்.... என்று சொல்வது போல இருக்குதுங்களே......
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-ஏப்-202112:43:45 IST Report Abuse
Visu Iyerமக்கள் பிரச்சனை என்றால் கொரனாவே உனக்கு எப்படி காதில் விழுகிறது.. உடனே அந்த இடத்திற்கு வந்து விடுகிறாயா என்று கோரனாவை பார்த்து கேட்பது போலவே இருக்குதுங்களே... குமரி கடலின் சத்தத்தில் இது கூட கேட்குதுன்களா....
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
14-ஏப்-202104:10:48 IST Report Abuse
blocked user வீட்டுக்கு வெளியே முகக்கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கையை சுத்தம் செய்வது நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும்.
Rate this:
SIRUVEERAN - chennai,இந்தியா
14-ஏப்-202111:28:03 IST Report Abuse
SIRUVEERANஎப்படி கும்ப மேளாவில் ஒருவர் விடாமல் முக கவசம் அணிந்துகொண்டு பாதுகாத்து கொள்கிறார்களே அதுபோலவா...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-ஏப்-202112:44:30 IST Report Abuse
Visu Iyerவீட்டுக்குள்ளேயே சிலர் போன மாதம் போட்ட முக கவசத்தை கழற்றாமல் இருக்கிறாரே.. அவரை என்ன சொல்ல.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X