பொது செய்தி

இந்தியா

ரஷ்ய தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

Added : ஏப் 13, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரசுக்கு எதிராக, ரஷ்யா தயாரித்துள்ள, 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியைப் பயன்படுத்த, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. 'டாக்டர் ரெட்டிஸ்' நிறுவனம், இந்த தடுப்பூசியை, ரஷ்யாவில் இருந்து, இறக்குமதி செய்ய உள்ளது.கொரோனா வைரசுக்கு எதிராக, நம் நாட்டில் இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது இரண்டாம் அலை பரவல்
 ரஷ்ய தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி:கொரோனா வைரசுக்கு எதிராக, ரஷ்யா தயாரித்துள்ள, 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியைப் பயன்படுத்த, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

'டாக்டர் ரெட்டிஸ்' நிறுவனம், இந்த தடுப்பூசியை, ரஷ்யாவில் இருந்து, இறக்குமதி செய்ய உள்ளது.கொரோனா வைரசுக்கு எதிராக, நம் நாட்டில் இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது இரண்டாம் அலை பரவல் தீவிரமாக உள்ளது. அதிகமானோருக்கு தடுப்பூசிகள் வழங்கும் வகையில், 'ரஷ்யாவின், ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கலாம்' என, நிபுணர் குழு பரிந்துரைத்திருந்தது.

அதை ஏற்று, இந்த தடுப்பூசியை பயன்படுத்த, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இந்த தடுப்பூசியை, முதல்கட்டமாக, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இறக்குமதி செய்ய உள்ளது.

ஆண்டுக்கு, 85 கோடி தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க, பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன், ரஷ்யா நேரடி ஒப்பந்தம் செய்துள்ளது.உலகெங்கும், 60 நாடுகளில், இந்தத் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதிக நாடுகள் ஒப்புதல் அளித்து உள்ள தடுப்பூசியில், இது இரண்டாவது இடத்தில் உள்ளது.


மேலும் பல தடுப்பூசிகள்!

ரஷ்ய தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ள மற்ற தடுப்பூசிகளையும், இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.'தற்போது அதிக அளவு தடுப்பூசிகள் தேவை. இந்த சூழ்நிலையில், பல்வேறு நாடுகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி களை, இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிக்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X