தேர்தல் கமிஷனை கண்டித்து மம்தா தர்ணா

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (17+ 84)
Share
Advertisement
கோல்கட்டா :பிரசாரம் மேற்கொள்ள, தேர்தல் கமிஷன் விதித்த தடையை கண்டித்து, கோல்கட்டாவில், முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு,
தேர்தல் கமிஷன், கோல்கட்டா, மம்தா தர்ணா

கோல்கட்டா :பிரசாரம் மேற்கொள்ள, தேர்தல் கமிஷன் விதித்த தடையை கண்டித்து, கோல்கட்டாவில், முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு, வரும், 17ல் நடக்கிறது. இதற்கிடையே, தேர்தலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ள மத்திய பாதுகாப்புப் படையினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின்படி செயல்பட்டு வருவதாக, பிரசாரத்தில் ஈடுபட்ட போது, மம்தா பானர்ஜி, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.


இது குறித்து, விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி, முதல்வர் மம்தா பிரசாரம் செய்ய, 24 மணி நேர தடை விதித்தது. இந்த தடை, நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, கோல்கட்டாவில் உள்ள காந்தி சிலை முன், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, முதல்வர் மம்தா, நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன், திரிணமுல் காங்., தலைவர்கள் யாரும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி, ராணுவத்துக்குச் சொந்தமானது. போராட்டம் நடத்த, திரிணமுல் காங்., தரப்பில் அனுமதி கேட்டு, காலை, 9:40 மணிக்கு தான் மனு தரப்பட்டது. அது குறித்து பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், மம்தா, முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பா.ஜ., நிர்வாகிக்கு தடை



மேற்கு வங்க மாநில, பா.ஜ., மூத்த தலைவர் ராகுல் சின்ஹா, சமீபத்தில் கூச்பெஹரில் நடந்த வன்முறை பற்றி பேசுகையில், 'மத்திய பாதுகாப்பு படையினர், நான்கு பேருக்கு பதிலாக, எட்டு பேரை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்' என்றார். இது பற்றிய புகாரை விசாரித்த தேர்தல் கமிஷன், ராகுல் சின்ஹா பிரசாரத்தில் ஈடுபட, நேற்று பிற்பகல், 12:00 முதல், 15ம் தேதி பிற்பகல், 12:00 மணி வரை தடை விதித்துள்ளது. 'கூச்பெஹரில் நடந்த வன்முறை போல், மேலும் பல இடங்களில் வன்முறை நடக்கும்' என, கூறியது பற்றி விளக்கம் கேட்டு, மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவர் திலிப் கோஷுக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17+ 84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
15-ஏப்-202100:31:03 IST Report Abuse
SaiBaba அறுபது வயதில் நம் அம்மாவைப்பாருங்கள்.
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
14-ஏப்-202119:13:41 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது பெண் இடம் வீரம் காட்டும் பாகுபலி கூட்டம்
Rate this:
sankar - Nellai,இந்தியா
14-ஏப்-202120:45:35 IST Report Abuse
sankarஇவள் பெண் அல்ல - அரக்கி...
Rate this:
14-ஏப்-202121:34:02 IST Report Abuse
ஸ்டாலின் ::உண்மை கேடிஜியை வீழ்த்த போகும் அரக்கி...
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். முதலில் குலை உடைத்தார்கள், பின் இப்போது வாயை உடைக்க பார்க்கிறார்கள். இப்படியெல்லாம் சொய்தாலும எங்கள் தீதீயக்காவின் மாபெரும் வெற்றியை தடுக்க முடியாது..அது தாகூர் மண்ணூ! அங்கு தாமரை மலராது கண்ணூ!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X