அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரக்கோணத்தில் இளைஞர்கள் படுகொலை ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை

Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை:''அரக்கோணம் அருகே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்திற்கு, தலா, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என, இந்திய பெண் சிந்தனையாளர்கள் களம் அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ப.சிவகாமி வலியுறுத்தி உள்ளார். சென்னையில் நேற்று, ப.சிவகாமி, வழக்கறிஞர் ரஜினி, மனித உரிமை செயல்பாட்டாளர் கல்பனா சதீஷ் ஆகியோர் அளித்த பேட்டி: அரக்கோணம் அருகே
 அரக்கோணத்தில் இளைஞர்கள் படுகொலை ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை

சென்னை:''அரக்கோணம் அருகே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்திற்கு, தலா, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என, இந்திய பெண் சிந்தனையாளர்கள் களம் அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ப.சிவகாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் நேற்று, ப.சிவகாமி, வழக்கறிஞர் ரஜினி, மனித உரிமை செயல்பாட்டாளர் கல்பனா சதீஷ் ஆகியோர் அளித்த பேட்டி: அரக்கோணம் அருகே சோகனுார் - செம்பேடு கிராமத்தில், ஏப்., 7ல், ஆதிதிராவிட இளைஞர்கள் சூரியா, அர்ஜுன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.அந்த இளைஞர்கள், மதுபோதை தகராறில் கொலை செய்யப்பட்டதாகவும், பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு சென்றதால் கொல்லப்பட்டனர் எனவும் செய்திகள் வெளியாயின.

இந்த கொலை தொடர்பாக, இந்திய பெண் சிந்தனையாளர்கள் களம் சார்பில், உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அதில், அவர்கள் அதற்காக கொலை செய்யப்படவில்லை. ஜாதி வெறியால் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.சமாதானம் பேச அழைத்து, கத்தியால் குத்தியும், கல்லை தலையில் போட்டும் கொலை செய்துள்ளனர். தீண்டாமை கொடுமை களை மூடி மறைக்கவே, உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தலா, 1 கோடி ரூபாய் இழப்பீடு, விவசாய நிலம், அரசு வேலை ஆகியவை வழங்க வேண்டும்.சோகனுார் - செம்பேடு ஆகிய கிராமங்களை இணைத்து, தனி ஊராட்சி அமைத்து, நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அரசின், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், நிலமற்ற ஆதி திராவிட மக்களுக்கு முன்னுரிமை வழங்கி, 100 நாட்களும் முழுமையாக வேலை தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-ஏப்-202105:22:10 IST Report Abuse
meenakshisundaram இவங்க உண்மை அறியும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட குழுவா அல்லது பஞ்சாயத்து செய்ய ஆனுப்பப்பட்டவர்களா ?நிவாரணம் என்பது அரசே செய்ய வேண்டிய ஒன்று அதுவும் மக்கள் வரிப்பணத்திலிருந்து .அதை ரெகமெண்ட் செய்ய இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
14-ஏப்-202117:48:12 IST Report Abuse
Hari மேக்கப் அப்படியே அடித்து தூக்கலாக இருக்குது,நல்லவர்களுக்கு ஆதரவு கொடுங்க அப்படியே நீங்க அறிவித்த பணம் எப்ப கொடுப்பீங்க மேடம்.ஏனெனில் நானும் சும்மா புல்லா உதிக்கினு ரெடியாக இருக்கேன்யாருகூடவாவது வம்பு இழுத்து சாவதற்குத்தான். உங்களைப்போல மகராசிகள் இப்படித்தான் சேவை செய்யணும் அப்புறம் மூலப்பத்திரம் காண்பிக்கிறமாதிரி இந்த பணம் கிடைக்கணும் ஆமா சொல்லிப்புட்டேன்.
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
14-ஏப்-202117:24:25 IST Report Abuse
Amirthalingam Shanmugam கொலைசெஞ்சவன் குடும்பத்திலிருந்து இரண்டுபேர் கொலை செய்யப்பட்ட இரண்டுபேர்களின் குடும்பத்திற்கு அணுப்பிவைத்து கொலையானவர்களின் கடமைகளை அந்த இரு குடும்பத்திற்கும் செய்யட்டும்.குடிபோதையில் கொலையான இளைஞர்களின் ஆத்மா ஷாந்தி அடையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X