யாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது?

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
உலகம் முழுவதும் தற்போதைய கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிகரித்துவரும் நிலையில் பல நாடுகளில் தடுப்பு மருந்து விநியோகம் அதிகரித்துள்ளது.பக்கவிளைவுகள்பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலை தயாரிப்பில் உருவான ஆஸ்ட்ராசெனேகா மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பு மருந்துகளில் சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தடுப்பு

உலகம் முழுவதும் தற்போதைய கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிகரித்துவரும் நிலையில் பல நாடுகளில் தடுப்பு மருந்து விநியோகம் அதிகரித்துள்ளது.



latest tamil news




பக்கவிளைவுகள்


பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலை தயாரிப்பில் உருவான ஆஸ்ட்ராசெனேகா மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பு மருந்துகளில் சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தடுப்பு மருந்து ஊசி செலுத்திக்கொண்ட சிலருக்கு ரத்த நாளங்களில் ரத்த உறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.


தற்காலிக நிறுத்தம்



ரத்தத்தில் உள்ள பிளாட்டிலெட் அளவு தடுப்பு மருந்தின் வீரியத்தால் குறைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணம் குறித்து தற்போது ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் நோய் தடுப்பு அமைப்பு ஏற்கனவே அங்கீகாரம் அளித்து இருந்த நிலையில் தற்போது அதன்மீது எழுந்த குற்றச்சாட்டு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் அதன் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

'செரிப்ரல் வெனஸ் சைனஸ் த்ரோம்போசிஸ்' எனப்படும் ரத்த உறைவு ஆஸ்ட்ராசெனேகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பு மருந்துகளை செலுத்துவதால் வெகுசிலருக்கு ஏற்படுகிறது. இந்த வகையில் ஏற்படும் ரத்த உறைவு மிகவும் அரிதானது என்று ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

வெகு சிலருக்கு மட்டுமே இவ்வாறான ரத்த உறைதல் ஏற்பட்டு அது மரணத்தை ஏற்படுத்துமே தவிர அனைவருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தாது என கூறியுள்ளனர் விஞ்ஞானிகள். கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வரை 68 லட்சம் டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பு மருந்துகள் அமெரிக்க குடிமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவர்களுள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆறு பெண்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு 6 முதல் 13 நாட்களில் ரத்த உறைவு ஏற்பட்டு உள்ளது.ஐரோப்பிய நாடுகளிலும் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இரண்டு வாரங்களில் இரத்த உறைவு ஏற்படுகிறது.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ரத்த உறைவைத் தடுக்க வெவ்வேறு விதமான மருத்துவ முறைகள் மருத்துவ விஞ்ஞானிகளால் கையாளப்படுகின்றன.எனவே ரத்த உறைவைத் தடுக்க ஒரே மாதிரியான சிகிச்சை அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது இதமூலமாகத் தெளிவாகிறது.


latest tamil news




விரைவில் தீர்வு



இதுகுறித்து ஆஸ்ட்ராசெனேகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனர்கள் கூறுகையில் வெகு சிலருக்கு ஏற்படும் அரிய வகை ரத்த உறைவைத் தடுக்க தனிநபரின் மருத்துவ ஆய்வு முடிவுகளை தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கான தீர்வு விரைவில் கிடைக்க தங்களது நிறுவன விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SRK - Chennai,இந்தியா
19-ஏப்-202114:19:36 IST Report Abuse
SRK இந்த கொராணாவைப்பற்றி அதிகம் பேசும் எல்லோரும் அதைத் தொடங்கி வைத்த புண்ணியவான் சீனாக்காரனைப்பத்தி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை, அது ஏன்? யாராவது தெளிவு படுத்தவும். இங்கு கூவுகின்ற கம்மிகளும் மற்றும் அவற்றின் கூட்டணி கட்சிகளும் வாயையே திறப்பதில்லையே அது ஏன்? எதோ மோடியும் எடப்பாடி பழனிச்சாமியும்தான் இதற்க்கெல்லாம் காரணம் என்பது போல.
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
18-ஏப்-202115:43:49 IST Report Abuse
W W ஏதோதோவிற்கு இன்ஸ்சுரன்ஸ் இருப்பதுபோல் இந்த வாக்சிங் போட்டு கொள்பவர்க்கும் ஒருவாரம் முதல் 3 மாதம் வரை குறைந்த சிலவில் இன்ஸ்சுரன்ஸ் கொடுக்கப்பட்ட வேண்டும். அப்போது தான் ஒரு உயிரின் விலை தெரியும்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
16-ஏப்-202115:26:56 IST Report Abuse
Sridhar இந்த வாக்சின்கள் நோய் வராமல் தடுக்கும் என்ற உத்திரவாதம் இல்லாத நிலையில், இதை பயன்படுத்துவதில் இவ்வளவு அவசரம் ஏன்? எப்படியும் எல்லோரும் முகக்கவசம் அணியத்தான் வேண்டும், சமூக இடைவெளி காக்க வேண்டும் மற்ற கொரோனாவுக்கு ஏற்ற முறைகளையும் பின்பற்றவேண்டும் எனும் நிலையில், இந்த வாக்சினை ஒரு வருடம் கழித்துதான் போட்டால் என்ன? பார்க்கப்போனால், வாக்சின்கள் இவ்வளவு சீக்கிரம் பயன்பாட்டிற்கு வரும் என்று மருத்துவ ஆய்வாளர்கல் சென்ற வருடம் கூட சொல்லவில்லை, மக்களும் எதிர்பார்க்கவில்லை. முதலில் ஒரு தடவை என்றவர்கள், பிறகு இருமுறை என்றார்கள், இப்போது ஒவ்வொரு வருடமும் போடவேண்டும் என்கிறார்கள் இவர்களின் வியாபார வெறி எங்கேபோய் முடியுமோ தெரியவில்லை. வியாபாரம் ஒருபுறம் இருந்தாலும், பக்கவிளைவுகளை - குறிப்பாக நம் சந்ததியினருக்கு - நினைத்தால் உண்மையாகவே மிகவும் பயமாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X