அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாலை பெயர் மாற்றம்: ஸ்டாலின் எதிர்ப்பு

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (93)
Share
Advertisement
சென்னை :சென்னையில் ஈ.வெ.ரா. சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையில் 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என எழுதியதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது: ஈ.வெ.ராமசாமி நுாற்றாண்டு விழாவை ஒட்டி சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு 'ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை' என 1979ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர்
 சாலை பெயர் மாற்றம்: ஸ்டாலின் எதிர்ப்பு


சென்னை :சென்னையில் ஈ.வெ.ரா. சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையில் 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என எழுதியதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:
ஈ.வெ.ராமசாமி நுாற்றாண்டு விழாவை ஒட்டி சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு 'ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை' என 1979ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார்.
தற்போது நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என எழுதப்பட்டிருப்பதும் அத் துறை இணையதளத்தில் இவ்வாறே குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது. மீண்டும் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும்.

தாமதம் செய்தால் மே 2க்கு பின் அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும்என கூறியுள்ளார். வைகோவும் பெயர் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆவணங்களில் மாறாத பெயர்1979ல் ஈ.வெ.ரா. நுாற்றாண்டு விழாவை ஒட்டி பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டாலும் நெடுஞ்சாலைத் துறை ஆவணங்களில் 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என்றே உள்ளது. அதையே நெடுஞ்சாலைத் துறையினர் சமீபத்தில் வைத்த அறிவிப்பு பலகைகளில் எழுதி உள்ளனர். இந்நிலையில் அறிவிப்பு பலகையில் இருந்த 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என்ற பெயரை கருப்பு பெயின்டால் சிலர் அழித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravan - bangaloru,சவுதி அரேபியா
15-ஏப்-202113:32:13 IST Report Abuse
saravan தமிழ் கலாசார சித்திரை வருடப்பிறப்பையே மாற்றவேண்டும் என்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்த மூலம் உங்களை என்ன சொல்ல... இந்த மாற்றம் தமிழனுக்கு தேவையில்லை...வோட்டிங் வைக்கலாம்...
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
14-ஏப்-202120:47:01 IST Report Abuse
rajan ஈவெரா என்ன தியாகியா? அது ஒரு கழிசடை....பெண்கள் பல ஆண்களை வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று குடும்பப் பெண்களுக்கு தவறான வழி முறையை சொல்லி தமிழகத்தின் மான்பையே கொச்சை படுத்திய கழிசடை... அவர் பெயரை எதற்கு தேசிய நெடுஞ்சாலைக்கு வைக்க வேண்டும்.
Rate this:
Aovaiyyar Dasan - Chennai,இந்தியா
16-ஏப்-202122:21:40 IST Report Abuse
Aovaiyyar Dasanஐயா உங்கள் கருத்தை ஏற்கிறேன்...
Rate this:
Cancel
14-ஏப்-202120:21:56 IST Report Abuse
Boopathi Subramanian சுடலை உனக்கு அரசியலும்தெரியலபேசவும் தெரியலகட்சி நடத்த தெரியலதமிழை கூட நல்லா பேசதெரியல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X