பொது செய்தி

இந்தியா

தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகத்தில், ஏழு ஜாதி பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.தமிழகத்தில், தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளில் இருக்கும் மக்கள் தங்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என, ஒரே
President, Ram Nath Kovind, Devendra Kula Vellalar Bill

புதுடில்லி: தமிழகத்தில், ஏழு ஜாதி பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

தமிழகத்தில், தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளில் இருக்கும் மக்கள் தங்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என, ஒரே பெயரில் அழைக்க வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியது.


latest tamil newsபிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழகம் வந்தபோது, இது தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தனர். அவர் அளித்த வாக்குறுதியின்படி, இதற்கான சட்ட திருத்த மசோதாவை, பார்லிமென்ட்டின் லோக்சபாவில் தாக்கல் செய்து, மத்திய அரசு நிறைவேற்றியது. அதனை தொடர்ந்து ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் மசோதா சட்டமாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
warm chelli -  ( Posted via: Dinamalar Android App )
14-ஏப்-202121:29:25 IST Report Abuse
warm chelli rajagopal நீங்க சொல்லுவது தவறு இன்னைக்கு 80/100 sc, st than goverment job la இருக்காங்க, சாதி அமைப்பு எல்லோருக்கும் மாமன் மச்சான் சம்பந்தன் அண்ணன் தம்பி இப்படி ஒரு சாதி இல் தான் கிடைக்கும் அடுத்த சாதி இல் கிடைக்காது
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-ஏப்-202120:05:30 IST Report Abuse
Rajagopal சாதிகள் ஒழியப்போவதில்லை. எல்லோருக்கும் ஒரு இனப்பற்று, பாரம்பரியம் போன்றவை உண்டு. எது தவறென்றால் சாதிகளுக்கிடையே இருக்கும் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவை. மக்கள் தங்கள் சாதிகளை பற்றி பெருமை கொள்வதில் தவறில்லை. ஆனால் நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்கிற எண்ணம் ஒழிய வேண்டும். முன் காலத்தில், சாதிகள் பொருளாதாரத்தில் வளமாக இருந்தவை. வங்கிகள் இல்லாத காலத்தில், சாதிகளுக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்தும், தூக்கி விட்டும், ஆதரவு கொடுத்தான் இருந்தார்கள். தொழில் நுட்பம் உலகிலேயே தலைச்சிறந்ததாக இருந்தது. பொருளாதாரம் உயர்ந்து, வறுமையே இல்லாமல் எல்லோரும் வளமாக வாழ்ந்தார்கள். பிச்சையெடுத்து வாழ்ந்தது வெறும் துறவிகளும், ஆண்டுகளும், பைராகிகளும் மட்டுமே. இதை நான் சொல்லவில்லை. மார்க்கோ போலோ சொல்கிறார். மெக்காலே சொல்கிறார். ஒவ்வொரு கலாச்சாரமும் இயற்கையாக ஒரு பரிமாணத்தை அடைகிறது. நமது கலாச்சாரங்கள் இந்த மண்ணிற்கு ஏற்ற மாதிரி சாதிகளால் வளர்ந்தன. எதோ ஒரு இடத்தில் இது துருப்பிடிக்க தொடங்கியது. துருக்கியர்கள், முகலாயர்கள் செய்த கோரத்தாக்குதல்கள், போர்கள், இடம் பெயர்தல், தாங்க முடியாத வரிகள் போன்றவை, வளமாக வாழ்ந்த சாதிகளின் கட்டமைப்பை சிதைத்து, வறுமையை நுழைத்தன. பல சாதிகள் பொருளாதாரம் குன்றி, வலுவிழந்து, தொழில் நுட்பம் மறைந்து, வாழ முடியாமல் திணறின. இதில் மேலிருந்து கீழே விழுந்த உயர்ந்த சாதிகளும் உண்டு. சில சாதிகள், நிலைமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மேலே உயர்ந்தன. ஆங்கிலேயர்கள் இருக்கும் கட்டமைப்பை மேலும் சிதைத்தார்கள். பொருளாதார சுதந்திரத்துடன் வாழ்ந்த பல சாதிகள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் மூழ்கின. துருக்கியர்களும், ஐரோப்பியர்களும் கொண்டு வந்த பல வியாதிகள் (டய்பாய்டு, மலேரியா, காலரா, போலியோ, பிளேக் போன்றவற்றிற்கு) எதிர்ப்பு சக்தி மக்களிடையே இல்லை. தீண்டாமையின் தொடக்கங்களுக்கு இவையும் ஒரு காரணம். ஆங்கிலேயர்கள் நமது கலாச்சாரத்தை பெரிய அளவில் சிதைத்துள்ளார்கள். அதை மறைத்து, நம் மேலே பழி சுமத்தி, நம்மையே நமக்கெதிராகக் கிளப்பி, எல்லாவற்றையும் திசை திருப்பி, தங்களுக்கு சாதகமாக அமைத்துக்கொண்டார்கள். இன்று கொரோனாவினால் சோசியல் டிஸ்டன்ஸ் என்று வைத்திருக்கிறார்கள். தீண்டாமையும் வியாதிகளை கட்டுப்படுத்தக் கொண்டு வரப்பட்டதே. வறுமையில் பின் தங்கியவர்கள் இதனால் ஒதுக்கப்பட்டார்கள். அவர்களை பார்த்தாலே வியாதி வரும் என்று பீதி கிளம்பும் அளவுக்கு சமூகங்கள் பின்னடைவு அடைந்தன. இதன் மூல காரணங்களை மக்கள் மறந்து விட்டார்கள். இவை இன்று தேவையில்லை. ஆனால் சமூகங்கள் இந்த மாதிரி விரிவுகளை, அறியாமையால் வளர்க்கின்றன. மக்களை ஒருவருக்கொருவர் எதிராகக் கிளப்பி அவர்களை ஆளும் திறமை பெற்ற ஆங்கிலேயர்கள், நமது வரலாற்றையே எல்லாம் நமது தவறு போல செய்து விட்டார்கள். அதற்கு பின் வந்த நம் அரசியல்வாதிகளும், மத மாற்ற இயக்கங்களும், சாதி வேறுபாடே வளர்த்து, வெறுப்பை வளர விட்டு, தங்களுக்கு சாதகமாக ஆக்கி விட்டார்கள். இழப்பு மக்களுக்கே. இனிமேல் என்ன செய்ய வேண்டும்? தாழ்ந்தவர்கள் ஒதுக்கப்படுவது படிப்பின்மையால், பொருளாதார வலிமை இல்லாததால். அதை மாற்றினால் எல்லாம் மாறி விடும். உயர்சாதி பெண்களை திருமணம் செய்தால் ஒழியாது. இட ஒதுக்கீட்டோடு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனும், பண உதவியும், பயிற்சியும் கொடுத்து, அவர்களை ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வழி செய்து கொடுத்து, பொருளாதாரத்தில் தற்சார்பு அடைய வழி செய்தால், சாதி வேறுபாடுகள் தானாக மறையும். படிப்பறிவு வளரும். அவர்களை பின்தங்கியவர்களாக எப்போதும் வைத்திருக்க சதிகள் நடக்கிறது இன்று. நாடார் சமூகத்தை பாருங்கள். அவர்கள்தான் நல்ல உதாரணம். மக்கள் எப்போதும் ஒரு இன ஒற்றுமையோடுதான் வாழ்வார்கள். சீக்கியர்களும், மார்வாடிகளும், படேல்களும், செட்டியார்களும் இன்று வளமாக இருப்பதன் காரணம், சாதி/இன ஒற்றுமை, பொருளாதார உயர்வு, பெருமையால்தான். சாதிகள் ஒழியாது. ஆனால் அவற்றுக்கிடையே இருக்கும் ஏற்ற தாழ்வுகளை நிச்சயமாக குறைக்க முடியும். புதிய சாதிகள் உண்டாகிக்கொண்டே இருக்கும். இதுதான் உண்மை. வெறுப்பினால் எதுவும் செய்ய முடியாது. நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. வளர்க்கத்தான் முடியும்.
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
14-ஏப்-202116:13:41 IST Report Abuse
Nesan வங்கிக்கும் மனித வாழ்க்கைக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. என்ன கொடுமைடா இது. எல்லா சாதிகளையும் ஒரே பேருலே கொண்டுவர, மோடி யோசிங்க..... யோசித்தா, ஹிந்து ஒரே சதியாக்கிடுங்க. நான் உங்களுக்கு இரண்டு சாதி சொல்லுறேன் ஒன்னு புதில்லை. ஆண் சாதி, பெண் சாதி, இரண்டுக்கு நடுவில் நம் சாதி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X