'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021
Share
Advertisement
புதுடில்லி :'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து, சி.சி.ஐ., எனப்படும் இந்திய தொழில் போட்டி கட்டுப்பாட்டு அமைப்பு விசாரிப்பதை எதிர்க்கும் வழக்கில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தின் புதிய தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் மற்றும் டில்லி உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு
வாட்ஸ் ஆப், வழக்கு, தீர்ப்பு, ஒத்திவைப்பு

புதுடில்லி :'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து, சி.சி.ஐ., எனப்படும் இந்திய தொழில் போட்டி கட்டுப்பாட்டு அமைப்பு விசாரிப்பதை எதிர்க்கும் வழக்கில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தின் புதிய தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் மற்றும் டில்லி உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க, சி.சி.ஐ., உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, டில்லி உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது.


latest tamil news



விசாரணையின்போது, சி.சி.ஐ., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அமன் லேகி வாதிட்டாவது: வாட்ஸ் ஆப் நிறுவனம், தன் பயனாளிகளிடம் இருந்து அதிக தகவல்களை சேகரித்து, அவற்றை, தாய் நிறுவனமான, 'பேஸ்புக்' சமூக வலைதளத்துடன் பகிரும் வகையில், புதிய கொள்கை அமைந்துள்ளது. அந்த கொள்கையில், தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.இந்த புதிய கொள்கை, தொழிலில் மற்ற நிறுவனங்களின் போட்டியை தடுக்கும் வகையில் உள்ளதா என்பது குறித்தே விசாரிக்கிறோம். மற்ற வழக்குகளுக்கும், இதற்கும் தொடர்பில்லை.இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை, உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X