பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: 'ஊடக போராளிகளின்' அலப்பறை!

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
ஆர்.இந்தளூரான், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஒரு நடிகர், சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டார். மற்றொருவர், கறுப்பு -- சிவப்பு வண்ணத்தில் முக கவசம் அணிந்து ஓட்டு போட்டார். இவ்வளவு தான் விஷயம். இதற்கு இந்த, 'ஊடக போராளிகள்' செய்த அலப்பறை தாங்க முடியவில்லை. வடிவேல் காமெடி தோற்றது போங்கள்! யானையைக் கண்ட குருடர்களைப் போல, இவர்களே ஏதாவது கற்பனை செய்து கொள்வது. பெட்ரோல் விலை

ஆர்.இந்தளூரான், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஒரு நடிகர், சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டார். மற்றொருவர், கறுப்பு -- சிவப்பு வண்ணத்தில் முக கவசம் அணிந்து ஓட்டு போட்டார். இவ்வளவு தான் விஷயம். இதற்கு இந்த, 'ஊடக போராளிகள்' செய்த அலப்பறை தாங்க முடியவில்லை. வடிவேல் காமெடி தோற்றது போங்கள்! யானையைக் கண்ட குருடர்களைப் போல, இவர்களே ஏதாவது கற்பனை செய்து கொள்வது. பெட்ரோல் விலை ஏறிவிட்டதாம்... அதனால், நடிகர் விஜய், சைக்கிளில் வந்தாராம்; அதை அவர், குறியீடு மூலம் சொன்னாராம். உங்கள் கற்பனையில், தீயை வைக்க!



latest tamil news



'ஊடக போராளிகள்' கிளப்பிவிட்ட வதந்தியைக் கண்டு பயந்த நடிகர் விஜய், 'பக்கத்து தெருவில் ஓட்டுச்சாவடி இருந்ததால், காரில் செல்லாமல், சைக்கிளில் சென்றேன்; வேறொன்றும் இல்லை' என, அறிவிப்பு வெளியிடும் அளவுக்கு, நிலைமையை பூதாகரமாக்கி விட்டனர். விஷயம் என்னவென்றால், ஓட்டுப்பதிவு அன்று, காலை, 11:00 மணிக்கு, இந்த விஷயத்தை பரபரப்பாக்கினர். அதன் வழியாக, பா.ஜ.,வுக்கு எதிராக, நடிகர் விஜய் ஓட்டு அளித்தார் என, பிரசாரம் செய்துள்ளனர். எப்படியெல்லாம், மக்களை ஏமாற்றுகின்றனர்?


latest tamil news



நடிகர் அஜித், கறுப்பு -- சிவப்பு வண்ணத்தில் முக கவசம் அணிந்து வந்தார். ஆகையால் அவர், தி.மு.க.,வுக்கு ஓட்டு போடச் சொன்னாராம். நல்ல கூத்து! நம் நாட்டில், அனைத்து வண்ணத்திலும், கட்சிக் கொடிகள் உள்ளன. சிவப்பு என்றால் கம்யூனிஸ்ட்; பச்சை என்றால் விவசாயி; மஞ்சள் என்றால் பா.ம.க.,- - கறுப்பு என்றால் தி.க., என, எந்த வண்ணம் இருந்தாலும், அதற்கு அரசியல் சாயம் பூச முடியும்.

'நான் நடுநிலையாளர்; அதனால், கட்சியை நினைவுபடுத்தும் எந்த வண்ணமும் அணிய மாட்டேன்' என்றால், நிர்வாணமாகத் தான் நிற்க வேண்டும்.வீட்டில் இருந்த முகக்கவசத்தை அணிந்து வந்தது, ஒரு குற்றமா?ஈரை பேணாக்கி, பேணை பெருச்சாளி ஆக்கிவிட்டனர், இந்த விஷமிகள்!

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
15-ஏப்-202105:34:55 IST Report Abuse
Natesan Narayanan அரசியல் வாதிகளுக்கும் சாதாரண வயதிற்கு தகுந்த மரியாதையை கொடுக்க வேண்டும் .
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
15-ஏப்-202102:21:57 IST Report Abuse
LAX இது அஜித் - விசய் ரசிகர்கள் அடித்துக்கொள்ளும் விஷயம் போன்றதல்ல.. அப்படி எடுத்துக்கொண்டு, விதண்டாவாதம் செய்யும் விசிலடிச்சான் ____ களுக்கு நான் வளக்கம் சொல்லப்போவதும் கிடையாது.. உண்மையில், ஒவ்வொரு முறையும் அஜித் அவர்கள் வரிசையில் நின்று ஓட்டளிப்பது, சிறப்பு செய்தியாகிவிடுகிறது.. அந்த வகையில்.. தன் பங்குக்கு தானும் 'ஏதாவது புதுசா செஞ்சு, ஊடகங்களுக்கு கொஞ்சம் தீனி போடுவோமே..' என்ற அவரது கணிப்பு.. கனிந்துவிட்டது.. அவரது விசிலடிச்சான் ____களும் வழக்கம்போல் விளம்பரம் செய்து கொண்டனர்.. மத்தபடி, பெட்ரோல் விலை ஏற்றத்தை குறிப்பிட சைக்கிள்ல வந்தாரென்றால்.. > அவர் வந்தது சாதாரண சைக்கிள் அல்ல.. அந்த சைக்கிளின் மதிப்பு.. சாதாரண பைக்குகள் பலவற்றின் விலையை விட பன்மடங்கு அதிகம்.. அந்த சைக்கிளின் மதிப்பிற்கு எவ்வளவு லிட்டர் பெட்ரோல் போட்ருக்கலாம்..? >> கொஞ்சம் தூரம்தானே னு சைக்கிள்ல வந்ததா சொன்னா.. நடந்தே வந்திருக்கலாம்.. இன்னொன்று.. இத்தனை தடவை ஓட்டு போடும்போதும் ஓட்டளிக்கும் மையம்.. பல மைல் தொலைவில் இருந்ததா என்ன..? நெய்வேலி ஷூட்டிங்லேர்ந்து ஐ.டி. ரெய்டுக்கு வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதன் விளைவு.. மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் கன்ட்டெய்னர் லாரி மேலெல்லாம் ஏறி நின்று ஃபோட்டோ எடுத்து அலப்பரை செஞ்சது மாதிரிதான் இதுவும்.. 😇
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஏப்-202100:29:56 IST Report Abuse
Pugazh V ஊடகங்களை.விட அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த இமெயில் போட்டவரும் அதற்கு முட்டுக்கொடுத்து கருத்து போட்டவர்களும் தான். தல, தளபதி இருவரும், மௌனமாக அமைதியாக பாஜக கூடாரத்தை சும்மா அதிர வெச்சுட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X