'சீனாவை முறியடிக்க இந்திய உறவு முக்கியம்'

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
வாஷிங்டன் : 'சீனாவை எதிர்கொள்ள, அமெரிக்காவுக்கு, இந்தியாவின் நட்புறவு மிகவும் முக்கியம்' என, அமெரிக்காவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைக்கும் வல்லுனர் குழு தெரிவித்துள்ளது.அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை வடிவமைப்பு குழு கூறியுள்ளதாவது: சீனாவின் வளர்ச்சியால், பொருளாதாரம், ராணுவம், சர்வதேச உறவுகளில், இந்தியா, அமெரிக்கா உட்பட பல
India, US, China, இந்தியா, சீனா, அமெரிக்கா

வாஷிங்டன் : 'சீனாவை எதிர்கொள்ள, அமெரிக்காவுக்கு, இந்தியாவின் நட்புறவு மிகவும் முக்கியம்' என, அமெரிக்காவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைக்கும் வல்லுனர் குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை வடிவமைப்பு குழு கூறியுள்ளதாவது: சீனாவின் வளர்ச்சியால், பொருளாதாரம், ராணுவம், சர்வதேச உறவுகளில், இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள், சவால்களை சந்தித்து வருகின்றன. இது போன்ற சூழ்நிலையில், வளரும் நாடுகள், இந்தியாவின் பக்கம் திரும்பத் துவங்கியுள்ளன.

சீனாவை எதிர்கொள்ள, இந்தியாவை விட, அமெரிக்காவுக்கு வேறு எந்த நாடும் முக்கியமானதாக இருக்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



சமஸ்கிருதத்தில் புத்தாண்டு வாழ்த்து


இந்தியாவில், பல மாநிலங்களில், நேற்றும், இன்றும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பாடகியும், நடிகையுமான மேரி மிலிபென், அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு, சமஸ்கிருத மந்திரங்களை கூறி, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க இந்தியர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பின், இந்திய பாரம்பரிய விழாக்கள், அதன் மத, கலாசார தொடர்பு பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன். அதன் பின் எனக்கு, இந்திய கலாசாரம் மற்றும் இந்தியா மீது பெரும் பற்று ஏற்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
14-ஏப்-202118:31:35 IST Report Abuse
திராவிஷ கிருமி சீனாவை மட்டுமல்ல... இந்தியாவிற்குள்ளேயே இருந்துகொண்டு தேசவிரோத ஹிந்துமத விரோத காரியங்களை செய்யும் சீனாவின் குஞ்சுகள் கம்மிகளையும் முறியடிக்கவேண்டும்... ஒழிக்கவேண்டும்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஏப்-202115:50:25 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாட்டில் மட்டும்தான் ஹிந்து சமயம் அழிக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஹிந்து சமயம் வேகமாக வளருகிறது.
Rate this:
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
15-ஏப்-202114:17:46 IST Report Abuse
திராவிஷ கிருமிகன்னியாகுமரி மாவட்டத்தில் சனாதன ஹிந்து சமயம் கிட்டத்தட்ட அழிந்து விட்டது... உபயம்... மதமாற்றி பாவாடைகள்... மற்றும் உள்பாவாடைகள்......
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-ஏப்-202113:02:41 IST Report Abuse
Ramesh Sargam சில நாட்களுக்கு முன்பு இதே அமெரிக்கா இந்திய கடற்கரை பகுதியில், இந்திய அரசின் அனுமதி இல்லாமல் Naval Exercise செய்தது. இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததற்கு, இந்திய அரசின் அனுமதி தேவையில்லை என்று பதிலளித்தது. இப்பொழுது எந்த மூஞ்சை (முகத்தை) வைத்துக்கொண்டு 'சீனாவை முறியடிக்க இந்திய உறவு முக்கியம்' என்று கூறுகிறது? நேரத்திற்கு தகுந்தாற்போல் பேசும் இந்த அமெரிக்காவிடம், இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
Rate this:
Jegadisan Jegadisan - chennai,இந்தியா
14-ஏப்-202123:22:43 IST Report Abuse
Jegadisan Jegadisanஅய்யா இந்த செய்தியே ,அமெரிக்கா அரபிக்கடலில் செய்த Naval பயிற்சியின் விளைவாக அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அறிவுரைதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X