பொது செய்தி

இந்தியா

அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி:''ஒருவரை கூட தவிர்க்காமல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா உறுதி எடுத்துள்ளது'' என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.டில்லியில் நேற்று 50 நாடுகள் பங்கேற்கும் 'ரெசினா மாநாடு' துவங்கியது. கொரோனா காரணமாக 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த மாநாட்டில்வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்த உலகம்
Corona Vaccine, Jaishankar, External Affairs

புதுடில்லி:''ஒருவரை கூட தவிர்க்காமல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா உறுதி எடுத்துள்ளது'' என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று 50 நாடுகள் பங்கேற்கும் 'ரெசினா மாநாடு' துவங்கியது. கொரோனா காரணமாக 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த மாநாட்டில்வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்த உலகம் 'வசுதேவ குடும்பம்' என்ற ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் கொள்கை.

உலகம் எப்படி இந்தியாவிற்கு முக்கியமோ அதுபோல உலகிற்கும் இந்தியா முக்கியமாக விளங்குகிறது.கொரோனாவுக்கு முன்பாகவே இந்தியா மனிதநேய அடிப்படையில் உலக நாடுகளுக்கு உதவி வந்தது. பேரிடர் நிவாரண உதவிகளை வழங்கி வந்தது.தற்போது கொரோனா தடுப்பூசி மருந்தையும் வழங்கி வருகிறது.


latest tamil news


இது உலகம் ஒரே குடும்பம் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.சர்வதேச ஒத்துழைப்பால் இந்தியா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளது. சர்வதேச ஒத்துழைப்பு ஒரு வழிப் பாதை அல்ல. ஒருவருக்கு ஒருவர் கொடுத்துப் பெறுவது.இந்தியா இதுவரை 90 நாடுகளுக்கு 651 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்தை வழங்கியுள்ளதில் இருந்து இதைப்புரிந்து கொள்ளலாம். ஒருவரைக் கூட தவிர்க்காமல் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

உதயமாகும் சக்தி ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. இந்தியா அறிவார்ந்த சக்தியாக விளங்க விரும்புகிறது. அது அனைவருக்கும் வாசலை திறந்து வைத்துள்ளது. தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு மற்றவர்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதுதான் உண்மையான பன்முகத் தன்மைக்கான அடித்தளம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஏப்-202119:58:25 IST Report Abuse
Boopathi Subramanian நீங்கள் நூற்றாண்டு காலம்வாழ வேண்டும்
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
14-ஏப்-202118:29:42 IST Report Abuse
Ramaraj P இந்திய மீனவர்கள் கொலை கச்சத்தீவு மீட்பிற்கு பின்னர் இருக்காது.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
14-ஏப்-202116:33:10 IST Report Abuse
K.n. Dhasarathan ஐயா வெளியுறவுத்துறை அமைச்சரே, தடுப்பூசி பற்றி பேசியது போதும், இங்கே இலங்கை என்கிற ஒரு சிறு நாடு ( மாநிலம்) நமது மீனவர்களை கொன்று குவிக்கிறது, படகுகளை, மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்கிறது, நமது கடல் படை குருட்டு யானையை போல அளவில் பெரிதாக இருந்தாலும் ஒன்றும் செய்வதில்லை , நம் மட்டும் அந்த நாட்டு மீனவர்கள் எல்லை மீறி வந்தால் பத்திரமாக திரும்ப ஒப்படைக்கிறோம், அதைப்பார்த்து அவர்கள் கொக்கரிக்கிறார்கள், எல்லோரும் இந்திரா காந்தி போல வர மாட்டர்கள்தான், ஆனாலும் ஒரு அமைச்சர் மாத்திரம் அல்ல ஒரு தமிழராக உணர்ந்து இதற்கு ஒரு நடவடிக்கை நிரந்தரமாக எடுக்க வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X