அருமையான கற்பனை வளம் உங்களுக்கு, மர்மக் கதை எழுதலாம் அல்லது சினிமா படமாக எடுக்கலாம்...

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு, பா.ம.க., - பா.ஜ.,வில் சேர்ந்துவிடும். அ.தி.மு.க.,வில் ஒருசிலர் ஜெயித்தாலும், அவர்களை தங்கள் கட்சியில் சேர்த்து, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக, பா.ஜ., அமர வாய்ப்பிருக்கிறது.- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்'அருமையான கற்பனை வளம் உங்களுக்கு உள்ளது.
அருமையான கற்பனை வளம் உங்களுக்கு, மர்மக் கதை எழுதலாம் அல்லது சினிமா படமாக எடுக்கலாம்...

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு, பா.ம.க., - பா.ஜ.,வில் சேர்ந்துவிடும். அ.தி.மு.க.,வில் ஒருசிலர் ஜெயித்தாலும், அவர்களை தங்கள் கட்சியில் சேர்த்து, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக, பா.ஜ., அமர வாய்ப்பிருக்கிறது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


'அருமையான கற்பனை வளம் உங்களுக்கு உள்ளது. மர்மக் கதை எழுதலாம் அல்லது சினிமா படமாக எடுத்தால் நன்கு ஓடும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு.


தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை நாங்கள் எதிர்த்த வழக்கில், அவர் மீது எங்களுக்கு தனிப்பட்ட எந்த கருத்தும் கிடையாது. வல்லுனர்கள் நிறைந்த அந்த பொறுப்புக்கு, அவர் தகுதி உடையவர் அல்ல என்பது தான் எங்கள் நிலைப்பாடு.
- சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.சுந்தரராஜன்


'எப்படியோ, ஓய்வுபெற்ற ஒரு அதிகாரியை எதிர்த்து, பிரபலமாகி விட்டீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.சுந்தரராஜன் அறிக்கை.


கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதற்கான பரிசோதனைக் கட்டணம், பிற மாநிலங்களில், 600 - 800 ரூபாயாக இருக்கையில், தமிழகத்தில் மட்டும், 1,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழிப்பறி கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


latest tamil news




'கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டியது அவசியம் தான்...' என, கூறத் தோன்றும் வகையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.


அன்புமணி ராமதாஸ் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்கக் கூடாதா; படிச்சவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க என்று, பா.ம.க.,வினர் புலம்புகின்றனராம்.
- மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்


'அப்படி எல்லாம் எல்லாரும் கிளம்பவில்லை. கம்யூ.,க்கள், தி.மு.க.,காரர்கள் மட்டும் தான் கிளம்பியிருக்கின்றனர்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.


படித்திருந்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன... எதிரணி வேட்பாளரை, பொறுக்கி என பேசும் அநாகரிகம் என்னிடம் இல்லை. கண்ணியமே என் படிப்பும், தகுதியும். எப்போதும் நான் திருமாவளவன் பக்கமே.
- எழுத்தாளர் சுப.வீரபாண்டியன்


'அன்புமணி சொன்ன அர்த்தம் வேறு; அவரின் எதிரணி ஆட்களான நீங்கள் எல்லாரும் வலியுறுத்தும் விதம் வேறு. வாய்ப்பு கிடைத்தால், எதிராளியை அமுக்கி விடுவீர்களே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், எழுத்தாளர் சுப.வீரபாண்டியன் அறிக்கை.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
15-ஏப்-202107:19:08 IST Report Abuse
Darmavan பொருக்கி போல் நடக்க கூடாது என்பதைவிட கூப்பிடக்கூடாது என்பது அநாகரீகம்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
14-ஏப்-202120:02:38 IST Report Abuse
தமிழ்வேள் இந்த திருமா ' அந்த சாதி ' ஆள் இல்லை .....அந்த சாதி மக்களை பொய்சொல்லி ஏமாற்றிக்கொண்டிருக்கிறான் ..ஒரு தெலுங்கு ஆசாமி எப்படி தமிழ்ச்சாதியை சேர்ந்தவனாவான் ? இவனை நம்பும் அந்த சாதி ஆட்கள் இந்த குருமாவை கேள்விகேட்டு பயப்படுகிறார்கள் .....குருமா ஒரு பிராடு 420 கேஸ் .....
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
14-ஏப்-202114:35:26 IST Report Abuse
konanki 11.05 BC/MBCபெண்களை தூக்குதல் 11.10 கடைகள்/ பாக்டிரிகள்/நிலங்கள்/பெட்ரோல் பங்க்/அரிசி மில்/சினிமா தியேட்டர் வைத்து இருப்பவர்கள் பெண்களுடன் நாடக காதல் செய்தல் 11.15.நாடக காதல் மூலம் கவர்ந்த பெண்களுடன் பதிவு திருமணம் 11.25 நாடக காதல் செய்த பெண்களின் குடும்பத்தை பணத்திற்காக பிளாக் மெயில் செய்தல் 11.30அரசாங்கத்திடம் 60,000பணம் மற்றும் 8 கிராம் தங்கம் பெற மனு.
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
15-ஏப்-202102:17:20 IST Report Abuse
Milirvanஹா.. ஹா.. ஆபாச பொம்மை கோவில் என்று பிதற்றல்..அந்த கோவில் நிலங்கள் ஆட்டை பிரசங்கம் குல்லா அணிதல், சிலுவையை தூக்கி காட்டுதல், கட்டப்பஞ்சாயத்து கமிஷன் கவனிப்பு .. இதெல்லாம் பாத்தா மனுஷனுக்கு 24 மணிநேரம் பத்தாது போலயே..? விடியற்காலை(?) பதினோரு மணி மே 2க்கு கனவு கலைந்து எழுந்து சங்கீ .. சங்கீ.. ஐயோ ..ஐயையோ.. என்று கதறல்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X