மம்தாவுக்கு தடை: பா.ஜ., உத்தரவால் எடுக்கப்பட்ட முடிவு - சஞ்சய் ராவத்

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
மும்பை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தோ்தல் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் தடை விதித்தது, பா.ஜ.,வின் உத்தரவுப்படி எடுக்கப்பட்ட முடிவு என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.மேற்கு வங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபைத் தோ்தல் நடைபெற்று வருகிறது. பிரசாரத்தின்போது சிறுபான்மையின மக்கள் தனக்கே வாக்களிக்க வேண்டும் என்று மம்தா பானா்ஜி
EC, SanjayRaut, Mamata, Ban, Campaigning, BJP, Decision, ShivSena, தேர்தல் ஆணையம், மம்தா, பிரசாரம், தடை, சிவசேனா, சஞ்சய் ராவத்

மும்பை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தோ்தல் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் தடை விதித்தது, பா.ஜ.,வின் உத்தரவுப்படி எடுக்கப்பட்ட முடிவு என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபைத் தோ்தல் நடைபெற்று வருகிறது. பிரசாரத்தின்போது சிறுபான்மையின மக்கள் தனக்கே வாக்களிக்க வேண்டும் என்று மம்தா பானா்ஜி பேசியதாகவும், மத்திய பாதுகாப்புப் படைகளை முற்றுகையிட மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஏப்.,13 இரவு 8 மணி வரையிலான 24 மணிநேரத்திற்கு மம்தா பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.


latest tamil news


இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பதிவில், 'மம்தா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்தது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல். பா.ஜ.,வின் உத்தரவின் பேரில்தான் மம்தா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த பிரச்னையில் மம்தாவுக்கு சிவசேனா உறுதியான ஆதரவை அளிக்கிறது' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
14-ஏப்-202122:05:00 IST Report Abuse
a natanasabapathy படித்த முட்டாள் bjp தலைவருக்கும் 2 நாட்கள் தடைவிதிக்கப்பட்டதே அது மம்தா சொல்லியா. எதையாவது உளறுவதே தொழிலாகி விட்டது
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
14-ஏப்-202121:28:40 IST Report Abuse
mathimandhiri இவன் நிலைமை ஆப்பைப் பிடுங்கிய குரங்கின் கதையாய்த் தான் போய் முடிய போகிறது.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
14-ஏப்-202121:26:30 IST Report Abuse
mathimandhiri சிவ சேனா என்ற கட்சி அழிவுப் பாதையை தேர்ந்தெடுத்து அதில் சென்று கொண்டிருக்கிறது . அழிந்தும் விடும்////கூடிய விரைவில் //////-அதாவது இத்தாலிக் கட்சியுடன் இணைய வாய்ப்புள்ளது என்று தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X