பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் துவங்கியது தடுப்பூசி திருவிழா

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.,14) முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 4,328 மையங்கள் மூலம் தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் முழுமையாக கொண்டு சேர்ப்பதே இத்திருவிழாவின் நோக்கமாகும்.
Tamilnadu, Tika Utsav, CovidVaccine, தமிழகம், கொரோனா தடுப்பூசி, திருவிழா, கோவிஷீல்டு, கோவாக்சின்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.,14) முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 4,328 மையங்கள் மூலம் தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் முழுமையாக கொண்டு சேர்ப்பதே இத்திருவிழாவின் நோக்கமாகும். தமிழகத்தில் இன்று(ஏப்.,14) முதல் 16ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது தினசரி 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.


latest tamil news


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1,900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 4,328 மையங்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதில் 3,797 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 531 மையங்களில் கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
15-ஏப்-202102:21:14 IST Report Abuse
Venkatakrishnan உயிர்க்கொல்லியை விரட்ட செலுத்தும் தடுப்பூசியை வைத்து திருவிழா கொண்டாடுவது நம் சங்கிகளால் மட்டுமே முடியும்
Rate this:
Cancel
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் மோடி அவர்கள் வங்காளத்தில் வோட்டுக்கு பணம் தருகிறார் / இங்கே பழனி பணத்தை வாரி இறைத்தார் , இப்போ ஏன் இந்த ஊசி போட்டுகொண்டாள் 1000 தருகிறேன் என்று சொல்லவேண்டியது தானே இருவரும்
Rate this:
Cancel
ஸ்டாலின் முதல்வரா வந்திட்டார் - செந்தமிழ்நாடு ,இந்தியா
14-ஏப்-202120:09:23 IST Report Abuse
ஸ்டாலின் முதல்வரா வந்திட்டார் உயிர் காக்கும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள மக்கள் முன்வரவில்லை என்றால் - அதற்கு மத்திய அரசும், அதிமுக அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றி உரிய வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியது இரு அரசுகளும்தான். “தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” என்ற விழிப்புணர்வை உரிய காலத்தில் ஏற்படுத்தாமல் - தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையை வைத்தே தடுப்பூசி சப்ளை செய்யப்படும் என்று மத்திய பாஜக அரசு பிடிவாதம் காட்டுவது மிகவும் தவறான நடைமுறை. இது மாதிரி - தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசி சப்ளை செய்வதில் அறிவியல் பூர்வமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களின் உயிரோடு நடத்தும் விபரீத விளையாட்டாகும். கடந்த 8ஆம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, “தடுப்பூசி குறித்து இன்னும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் விரைந்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார் எனத் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X