பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கிற்கான சூழல் இல்லை: சுகாதார செயலர்

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், தற்போது, முழு ஊரடங்கிற்கான சூழல் இல்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:கொரோனா பரவலை குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். தடுப்பூசி போடுவதும் மிக முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
தமிழகம், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, சுகாதார செயலர்,ராதாகிருஷ்ணன், தடுப்பூசி,

சென்னை: தமிழகத்தில், தற்போது, முழு ஊரடங்கிற்கான சூழல் இல்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:கொரோனா பரவலை குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். தடுப்பூசி போடுவதும் மிக முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்கு அனைவரும் மாஸ்க் அணிந்து விதிமுறைகளை பின்பற்றினால், பாதிப்பு குறையும். தமிழகத்தில் வெண்டிலேட்டர்கள் தேவையான அளவு உள்ளது. மாஸ்க் போடாத 2.39 லட்சம் பேரிடம் 5.7 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு போடும் சூழ்நிலை தற்போது இல்லை. ஆனால், இது கொள்கை ரீதியான முடிவு. எங்கள் அளவில் எந்த முடிவும் எடுக்க முடியாது. முதல்வருடன் ஆலோசனை நடத்தாமல் எதுவும் கூற முடியாது. தமிழகத்தில் விற்பனை, திருமணம், இறப்பு கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நேரத்தில், கட்டுப்பாட்டு விதிகளை தவறாமல் கடைபிடியுங்கள். கூட்டத்தை தவிருங்கள்.

வீட்டில் இருந்து பணி செய்ய வாய்ப்பு உள்ளவர்கள், வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். நோய் பரவும் சூழலில் அனைத்து நிறுவனங்களும் இதை கடைபிடிக்க வேண்டும். தொழிற்சாலைகள், வேளாண்மை ஆகிய துறைகள் சார்ந்த நோய் பரவல் ஏற்படவில்லை. அஏதநேரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தீவிர நோய் பரவல் ஏற்பட்டது. சந்தைகள் போன்ற கூட்டங்களில் தனி கவனம் செலுத்துமாறு கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் வீடுகள்தோறும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. எவ்வித அறிகுறிகளும் இன்றி சிலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. காய்ச்சல், தலைவலி அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். எந்தவித அறிகுறியும் இல்லாவர்களுக்கு ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு 95 புள்ளிகளுக்கு கீழ் உள்ளவர்களை காய்ச்சல் முகாம்களுக்கு அனுப்பி உடனடியாக சோதனை மேற்கொள்கிறோம். தினமும் 400 இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அறிகுறிகள் இருந்தால், வீடுகளை தேடி வரும் தன்னார்வலர்களிடம் தெரிவிக்கவும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
15-ஏப்-202100:56:24 IST Report Abuse
Matt P அமைச்சர்களெல்லாம் அறிக்கை மேலே அறிக்கை விடுவாங்க.தேர்தல் பிரச்சார களைப்பில் வீட்டில ஒய்வு எடுக்கங்க போலிருக்கு. தேர்தல் எண்ணிக்கை முடிஞ்ச உடனே உங்க வாயை மூடி மூலையில் ஓரமா அமர வைச்சிருவாங்க. இப்போ உங்க காட்டில மழை ஸ்டாலின் அவர்கள் முதல்வரானவுடன் எல்லா கேள்விக்கும் உடுப்பு பையில் பதில்கள் தயாராயிருக்கும் . அறிக்கைகளும். ..ஆளுநரின் கீழ் அதிகாரிகளின் ஆட்சி இப்போது பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது. இப்படியே தமிழ்நாட்டில் எப்போதும் இருந்தால் நன்றாக தானே இருக்கும் எல்லா மாநிலத்திலயும் கூட . தற்போதைய பாண்டிச்சேரி நடைமுரை தான் மாநிலங்களில் எப்போதும் அமெரிக்காக்காவில். ஆளுநறையும் மக்களே தேர்ந்தெடுக்கலாம். படித்த அதிகாரிகளை ஆளுநர் தேர்ந்தெடுப்பார் ஓவ்வொரு துறைக்கும் செயலாளராக.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
14-ஏப்-202121:58:09 IST Report Abuse
தல புராணம் ஆமாம், இன்னும் சாகவேண்டியவங்க ரொம்ப பேரு பாக்கியிருக்காய்ங்க
Rate this:
Cancel
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஏப்-202119:28:03 IST Report Abuse
Murugesan அதிகார பசியால் அரசியல்வாதிகளின் அளவில்லா அஜாரகத்தால் விழைந்த பாதிப்பு, அரசியல் சுயநலவாதிகளினால் மக்களின் உயிருக்கு மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது, தேர்தலை தள்ளி வைத்திருக்கவேண்டும் கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்பை தமிழக மக்கள் இனிவரும் காலங்களில் பார்க்க முடியும்,
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
15-ஏப்-202101:04:41 IST Report Abuse
Matt Pகரோனா அதன் வாழ்க்கையை தள்ளிப்போடும் என்று எதிர்பார்க்க முடியாது. தேர்தலை தள்ளிப்போடுவது மூலம் ஆளும் கட்சியின் ஆட்சி நீட்டிப்பு அவர்களுக்கு சாதகமாக் முடியும்.எதிர்க்கட்சிகள் தேர்தலை நீடிப்பை எதிர்த்து போராடலாம். கனிமொழியிட தேர்தல் நீட்டிப்பு குறிப்பு கேள்வி கேட்டபோதும் தேவையில்லை. சமூக வெளியீட்டை, வாய் மூடி இவை தான் தேவை என்றார். கடைசியில் அவரையே பிடித்து கொண்டது கரோனா...மக்கள் கூட்டம் சேராத வகையில் இன்டர்நெட் வாக்குமுறையை பயன்படுத்தியிருக்கலாம். நவீன தொழில் நுட்ப முறையை வாக்களிப்புக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சித்திருக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X