உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு கொரோனா உறுதி| Dinamalar

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு கொரோனா உறுதி

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (26)
Share
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், 'கொரோனா உறுதியான அதிகாரிகள் என்னுடன் தொடர்பில் இருந்ததால்,
UttarPradesh, YogiAdityanath, CovidPositive, CM, உத்தரபிரதேசம், முதல்வர், யோகி ஆதித்யநாத், கொரோனா, பாதிப்பு, உறுதி

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், 'கொரோனா உறுதியான அதிகாரிகள் என்னுடன் தொடர்பில் இருந்ததால், தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைத்து பணிகளையும் மெய்நிகர் முறையில் துவங்க உள்ளேன்' என தெரிவித்து இருந்தார்.


latest tamil news


இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த வாரம் தான் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவரது டுவிட்டரில், 'அறிகுறிகள் தென்பட்டதும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. நான் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X