பொது செய்தி

இந்தியா

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்வதாகவும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மே 4ம் தேதி முதல் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் 2வது அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், சிபிஎஸ்இ தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என
CBSE, Exam, Postponed, சிபிஎஸ்இ, பொதுத்தேர்வு, ரத்து, ஒத்திவைப்பு

புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்வதாகவும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மே 4ம் தேதி முதல் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் 2வது அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், சிபிஎஸ்இ தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என டில்லி, மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்களும், காங்., முன்னாள் தலைவர் ராகுல், காங்., பொதுச்செயலர் பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.


latest tamil news


இதனையடுத்து இன்று (ஏப்.,14) பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். தேர்வுக்கு 15 நாளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
14-ஏப்-202119:27:35 IST Report Abuse
Viswam எக்ஸாம் கட்டாயம் நடக்கும் என்று மத்திய அரசு முடிவு எடுத்திருந்தால் அன்டோனியோ மைனோ முதல் துக்கடா செலிபிரிட்டி வரை ரத்து செய்யக்கோரி எழுதின கடுதாசு எல்லோரும் எடுத்து கருத்து போடுவாங்க. நடத்தாவிட்டால், நன்றாக படித்துவரும் மாணவர்கள் வருந்ததான் போகிறார்கள். பசங்களின் எதிர்காலம் என்னாவது என்று பெற்றோரும் அதே சமயம் கரோனா மேலே இருக்கும் பயத்தால் ஒன்றும் சொல்ல முடியாமல் தவிக்கத்தான் போகிறார்கள். இந்த மாதிரி எக்ஸாம் நடக்கவில்லை என்றால் நம்ம டியூஷனில் சேர்ந்து யார் படிக்கப்போறாங்க என்று கோச்சிங் கிளாஸ் நடத்தறவங்களும் பகீர்ன்னு இருக்கத்தான் போவுது. எத்தனை நாள் கஷ்டப்பட்டு சொல்லிகுடுத்தும் பரீக்ஷை இல்லாமல் செஞ்சுட்டாங்களேன்னு நல்லாசிரியர்களும் வருந்தான் போறாங்க. பத்தாவத்தை ரத்து செஞ்சும் பிளஸ் டூ வை தள்ளிவச்சும் முடிவெடுத்துருக்காங்க. மே மாதம் கரோனா கட்டுக்குள் வரவில்லையென்றால் பன்னிரண்டாவதும் ரத்தாகலாம். கைவசம் வேறு நல்ல வழி இருப்பதாக தோன்றவில்லை. இந்த மாதிரி வருடாந்திர பரீக்ஷகளை ஆன் லைன் மூலம் நுழைவுத்தேர்வு போல நடத்துவது கடினம். இனிமேல் அப்படிதான் நடத்தவேண்டிருக்கும் நிலை வந்தால் ஒருவேளை அதற்கு ஏத்தமாதிரி எக்ஸாம் படிவத்தை மாற்றி வருங்காலத்தில் ஏற்பாடு செய்ய நேரலாம். எதெற்கெடுத்தாலும் குறை சொல்லும் கூட்டத்திற்கு மோடி இருக்கவே இருக்கிறார் அவர் மீது பழியை போட்டுவிட்டு இப்போது பிள்ளைகளை நிம்மதியாக இருக்க விடுங்கள்.
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
14-ஏப்-202117:44:20 IST Report Abuse
திராவிஷ கிருமி ஆன்லைன் தேர்வுகள் நடத்துவதில் என்ன பிரச்சினை???
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
14-ஏப்-202117:43:18 IST Report Abuse
திராவிஷ கிருமி மிகவும் தவறான முடிவு... பள்ளி தேர்வுகளை ரத்து செய்வதில் காட்டிய அக்கறையை தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டம் கூட்டி கொரோனாவை பரவ செய்தபோது காட்டியிருக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X