மருத்துவமனை அலட்சியத்தால் முன்னாள் ராணுவ வீரர் மரணம்

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
பாட்னா: பீஹாரில், கொரோனா பாதித்து உயிருக்கு போராடிய முன்னாள் ராணுவ வீரரை மருத்துவமனையில் அனுமதிக்காமல், அமைச்சரை வரவேற்பதில் மருத்துவமனை அலட்சியம் காட்டியது. இதனால், அந்த வீரர் வாகனத்திலேயே உயிரிழந்தார்.பீஹார் மாநிலம் பாட்னா அருகே உள்ள லகிசாராய் பகுதியை சேர்ந்தவர் வினோத் சிங், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதியானது.
bihar, பீஹார், மருத்துவமனை,அலட்சியம், முன்னாள் ராணுவ வீரர், கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, மரணம், உயிரிழப்பு, அமைச்சர், மங்கள் பாண்டே,

பாட்னா: பீஹாரில், கொரோனா பாதித்து உயிருக்கு போராடிய முன்னாள் ராணுவ வீரரை மருத்துவமனையில் அனுமதிக்காமல், அமைச்சரை வரவேற்பதில் மருத்துவமனை அலட்சியம் காட்டியது. இதனால், அந்த வீரர் வாகனத்திலேயே உயிரிழந்தார்.

பீஹார் மாநிலம் பாட்னா அருகே உள்ள லகிசாராய் பகுதியை சேர்ந்தவர் வினோத் சிங், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதியானது. உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு படுக்கைகள் இல்லாததால், அவரை அனுமதிக்க டாக்டர்கள் மறுத்துவ விட்டனர். இதன் பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து நாலந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்து, வாகனத்தில் அழைத்து சென்றனர்.


latest tamil newsஆனால், அங்கு மாநில சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே ஆய்வுக்கு வர இருந்தார். அவரை வரவேற்கும் நடவடிக்கைகளில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், வினோத் சிங்கை உடனடியாக அனுமதிக்காமல் காத்திருக்க கூறினர். சுமார் 1.5 மணி நேரம் காத்திருந்தும் அவர் அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவரது உடல்நிலை மோசமடைந்து, அழைத்து வரப்பட்ட வாகனத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதற்கு வருத்தம் தெரிவித்து உள்ள அமைச்சர், மாநிலத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
15-ஏப்-202113:06:58 IST Report Abuse
Apposthalan samlin இந்த லட்சணத்தில் தமிழ் நாட்டில் பிஜேபி ஆட்சி வேண்டுமாம் திராவிட ஆட்சி தான் இந்த அளவு முன்னேற்றி உள்ளது . விரிவாக சொல்லவேண்டும் என்றால் காமராஜ் விதை போட்டார் திமுக அதிமுக உரம் போட்டு வளர்த்து இப்பொழுது கனி சாப்பிடுகிறோம் .
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
15-ஏப்-202114:33:32 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுபீகாரில் பிஜேபி ஆட்சி இல்லை...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
15-ஏப்-202109:08:17 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இங்கு மட்டும் என்னவாம். இரண்டு கழகங்களும் ஆட்சி செய்யும் போது அமைச்சர் வந்தால் அவ்வளவுதான். இது எல்லா இடங்களிலும் நடக்கிறது. காசு கொடுத்து வேலை வாங்கியவர்கள் செய்யும் செயல். இதை அரசு கண்டிக்க வேண்டும். ஆனால் ஆட்சயாளர்களும் விரும்புகிறாங்கள். பாதிக்க படுவது சாதாரண மக்களே. மன்னர் ஆட்சியை குறை சொன்னவர்கள் மக்கள் ஆட்சியை மன்னர் ஆட்சி போல் ஆக்கிவிட்டனர்
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
15-ஏப்-202107:47:22 IST Report Abuse
Amirthalingam Shanmugam மருத்துவமனை ஊழியர்களுக்கே, நாட்டின் பாதுகாப்புக்கு தன் உயிரை பணயம் வைத்து நாட்டைக்காப்பாற்றிய இராணுவனின் உயிரின் மதிப்பு தெரியவில்லையெனில் என்ன சொல்வது. பெரிய பெரிய மருத்துவமனைகள் ,தொழில் நுட்பவசதிகள் ,மெத்தப்படித்த மருத்துவர்கள் இருந்து என்ன பயன்.ஒரு அவசர கால நோயாளியை காப்பாற்ற முயற்சி கூட எடுக்கவில்லையெனில் இது என்ன நாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X