செப்.,க்குள் ஆப்கனிலிருந்து முழுமையாக வெளியேற அமெரிக்கா முடிவு!

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 11-க்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் திரும்பப் பெறுவது என முடிவெடுத்துள்ளார்.அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த செப்., 11, 2001-க்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நுழைந்தன. இரட்டை கோபுர தாக்குதலுக்கான திட்டம் அல்கொய்தா அமைப்பால் ஆப்கானிஸ்தானில் தான் போடப்பட்டது. அவர்களை அழிப்பதும்,
ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, ராணுவம், தலிபான், ஜோ பைடன், பயங்கரவாதிகள், வாபஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 11-க்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் திரும்பப் பெறுவது என முடிவெடுத்துள்ளார்.

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த செப்., 11, 2001-க்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நுழைந்தன. இரட்டை கோபுர தாக்குதலுக்கான திட்டம் அல்கொய்தா அமைப்பால் ஆப்கானிஸ்தானில் தான் போடப்பட்டது. அவர்களை அழிப்பதும், தாலிபான்களை அதிகாரத்திலிருந்து விலக்குவதையும் குறிக்கோளாக கொண்டு 2001-ல் அமெரிக்க படைகள் மற்றும் நேட்டோ படைகள் ஆப்கனில் நுழைந்தன. 20 ஆண்டுகளாக நடைபெற்ற போர் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினமான செப்., 11-ல் முடிவுக்கு வர உள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த போது, பிற நாடுகளின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வேலையை நம் படை வீரர்கள் செய்ய முடியாது என கூறி, படைகள் விலக்கலை அறிவித்தார். அதற்கான கெடுவாக மே முதல் தேதியை நிர்ணயித்திருந்தார். மேலும் ஆப்கன் அரசு மற்றும் தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்தார். ஆனால் படைகளை முழுமையாக விலக்கிக்கொண்டால் தான் பேச்சுவார்த்தை என்பதில் தலிபான்கள் உறுதியாக உள்ளனர். தற்போது அதிகாரம் பைடன் வசம் மாறியிருப்பதால் படைகள் வாபஸில் 5 மாத தாமதம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news




தலிபான் கை ஓங்கும்!


தற்போது 2,500 அமெரிக்க வீரர்கள் ஆப்கனில் உள்ளனர். அவர்களை முழுமையாக திரும்பப் பெற்ற பின், தலிபான்கள் ஆதாயமடைவார்கள் என்கின்றனர். அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கையில், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் நிலத்தை தக்க வைக்க தலிபான்களுடன் போராட வேண்டியிருக்கும் என கூறியுள்ளது. நாட்டை விட்டு வெளியேறும் போது அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. அப்படி தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என தலிபான்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
15-ஏப்-202109:34:40 IST Report Abuse
Viswam ஆப்கானிஸ்தானில் நெடும்காலமாக பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு உதவி செய்துவரும் இந்தியாவிற்கு பிரச்சினைகள் பலவிதங்களில் தலைதூக்கலாம். அமெரிக்காவும் போகிற போக்கில் இந்திய படைகளை அங்கே இழுத்துவிட்டுவிட்டு இனி நீங்கள் தாலிபானை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போகலாம். பாகிஸ்தானோ ஐஎஸஐ மூலமாக தாலிபானை வளைத்து போட்டு அவர்கள் உதவியுடன் இந்தியாவை ஆப்கானித்தானிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கும். அதில்லாமல் தாலிபான் உதவியுடன் காஸ்மீர் எல்லையிலும் போட்டுப்பார்க்க முயற்சிக்கும். கண்டஹார் மாதிரி விமானம் கடத்தல் மற்றும் கைதிகள் விடுவிப்பு நடக்குமா? தெரியாது தாலிபானை வைத்துக் கொண்டு மறுபடியும் போதைப்பொருள் ஆப்கானித்தானில் பயிரிட்டு தீவிரவாத செயல்களுக்கு அந்த பணத்தை பாகிஸ்தான் உபயோகிக்கலாம். இந்தியாவிற்கு என்ன சாதக பாதகங்கள் என போகபோகத்தான் தெரியும். பார்க்கப்போனால் அமெரிக்கா முழுமையாக விலகுவது நல்லது அல்ல ஆனால் இது அவர்களின் உள்நாட்டு பாலிடிக்ஸ்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
15-ஏப்-202108:02:50 IST Report Abuse
sankaseshan அமெரிக்க படை வெளியேற்றம் நம்நாட்டுக்கு தலைவலி பாகிஸ்தானுக்கும் தான் கவனமாக இருக்கவேண்டிய தருணம் . சீனாக்காரன் என்ன செய்யப்போறான் தெரியவில்லை
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
14-ஏப்-202123:03:22 IST Report Abuse
தல புராணம் இங்கே இருந்து வெளியேறும் ராணுவ வீரர்கள்.. இவர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்க வேறு எந்த நாட்டின் குடியை கெடுக்கலாம்னும் யோசிச்சிகிட்டும் இருப்பாங்க இந்த அமெரிக்க நல்லவங்க.. இவர்களுக்கு தளவாடம் விற்ற நிறுவனங்கள், இன்னொரு நாட்டிடம் "சீனா பூச்சாண்டி", "பார்டர் பூச்சாண்டி" ன்னு பயம் காட்டி அம்புட்டையும் அவங்க தலையிலே கட்டணும்.. கைகுலுக்கணும்.. பூச்சாண்டின்னு மக்களை பயமுறுத்தணும், கமிஷன் வாங்கி கொழுக்கணும் .. ஏமாத்தியே காலம் தள்ளணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X