பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 8ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.14)4வது நாளாக 7ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 3,464பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.87 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கைதமிழகத்தில் இன்று (ஏப்.,14) 7,819 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.14)4வது நாளாக 7ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 3,464பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.87 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.



latest tamil news




தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை



தமிழகத்தில் இன்று (ஏப்.,14) 7,819 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 9,54,948ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 262 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-193) மூலமாக, இன்று மட்டும் 97,668மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே 7 லட்சத்து 84 ஆயிரத்து 108மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,733பேர் ஆண்கள், 3,086 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,76,450ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,78,462 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.


டிஸ்சார்ஜ்



இன்று மட்டும் 3,464 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 87 ஆயிரத்து 663 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 25 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 12 பேர் தனியார் மருத்துவமனையிலும் 13 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,970 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,315 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
14-ஏப்-202121:53:44 IST Report Abuse
துயில் விரும்பி தமிழக மக்கள் ஒழுக்கமாக இருப்பதை காண முடிகிறது...தறுதலை அரிசியல்வாதிகள் சுயநலம் தான் மக்களை கூட்டமாக கூட வைத்து..நிலைமையை மோசமாக்க காரணம்..தறுதலை அரிசியால் வியாதிகள் முதலில் வீட்டு சிறையிலோ இல்லை அந்தமான் சிறையிலோ கொஞ்ச காலம் அடைத்தால் நிலைமை கட்டுக்குள் வரும்...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
14-ஏப்-202119:32:11 IST Report Abuse
S. Narayanan கொறினா தடுப்பூசி பொட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று மீண்டும் வராமல் இருக்கிறது என்ற தகவல் மக்கள் அனைவரையும் சென்று அடைந்தால் தான் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுவர். அது வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது.
Rate this:
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
14-ஏப்-202121:57:36 IST Report Abuse
துயில் விரும்பிதறுதலை தலைவர்களை கண்டு சிறையில் அடைக்க வேண்டும்..சொல் புத்தியும் சுய புத்தியும் இல்லாமல் அழுக்கு அரசியல் செய்து கூட்டம் கூட்டி வரும் தருதலைகளை சிறையில் அடைத்தால் காரோண கட்டுக்குள் வரும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X