பொது செய்தி

இந்தியா

கொரோனா அச்சம்: 2 வாரங்களுக்கு முன்னரே முடியும் மஹா கும்பமேளா?

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
டேராடூன்: உத்தரகண்டின் ஹரித்வாரில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவில் தனிநபர் இடைவெளியின்றியும், முகக்கவசங்களின்றியும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வதால், 2 வாரங்களுக்கு முன்னதாகவே விழாவை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹா கும்பமேளா திருவிழா நடைபெறும். அதன்படி 2010-க்கு பிறகு இந்தாண்டு ஏப்ரல்

டேராடூன்: உத்தரகண்டின் ஹரித்வாரில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவில் தனிநபர் இடைவெளியின்றியும், முகக்கவசங்களின்றியும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வதால், 2 வாரங்களுக்கு முன்னதாகவே விழாவை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.



latest tamil news


உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹா கும்பமேளா திருவிழா நடைபெறும். அதன்படி 2010-க்கு பிறகு இந்தாண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கும்பமேளா விழா தொடங்கி பிரம்மாண்டமாக நடக்கிறது. அதே சமயம் கொரோனா இரண்டாம் அலை பரவல் நாடு முழுவதும் பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. கும்பமேளாவில் பங்கேற்க கொரோனா இல்லை என்கிற சான்று வேண்டும். தனிநபர் இடைவெளி, முக்கவசம் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஆனால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வதால் கூட்டத்தினரை சமாளிக்க முடியாத நிலை உள்ளது. இன்று கும்பமேளாவின் முக்கிய நாள் என்பதால் காலை முதல் பக்தர்கள், சாதுக்கள் உட்பட மிகப்பெரிய கூட்டத்தினர் கங்கையில் புனித நீராடி வருகின்றனர். பிற்பகல் 2 மணி நிலவரப்படி 9,43,452 பேர் புனித நீராடியுள்ளனர். அனைவரும் நெருக்கமாக முக்கவசங்களின்றியே காணப்பட்டனர்.


latest tamil news


கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் அதே வேளையில் லட்சக்கணக்கில் கூட்டம் திரள அனுமதிப்பது விமர்சனத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக உத்தரகண்ட் அரசும், மதத் தலைவர்களுக்கும் ஆலோசனை நடத்தினர்.

அதில் 2 வாரங்களுக்கு முன்னதாக விழாவை முடித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரியிலேயே தொடங்கும் கும்பமேளா ஏற்கனவே ஒரு மாதமாக சுருக்கப்பட்டது. தற்போது நிலைமை சரியில்லாததால் மேலும் குறைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-202108:39:24 IST Report Abuse
ஆப்பு இதெல்லாம் முன்னாடியே நிறுத்திருவாங்க. மே.வங்காளத்துக்கு எட்டு முறை பறந்து படையெடுத்து போய் பரப்புவாய்ங்க.
Rate this:
Cancel
Manithan -  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-202117:57:46 IST Report Abuse
Manithan அடுத்த மததுக்க நடத்துந் அது குற்றம், அத நம்ம ஆளு செஞ்ச அது தவறு இல்லை? ennaya இது நியாயம்? வடிவேல் காமெடி தான்
Rate this:
Cancel
திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,வாலிஸ் புட்டுனா
15-ஏப்-202114:47:43 IST Report Abuse
திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது என்ன இது தெய்வ குத்தம் ஆகிவிட போகுது, முழுசா நடத்துங்கள், உங்கள் முதல்வர் தான் சொன்னாரே கடவுள் பார்த்துக்கொள்ளுவார் என்று என் இடையில் நிறுத்தணும், முழுசா நனைந்தாகிவிட்டது அப்புறம் முக்காடு எதற்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X