கலவரத்தில் கொல்லப்பட்ட குடும்பத்தை சந்தித்தார் மம்தா

Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மாத்தபங்கா:'மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் வன்முறையில், நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவேன்' என, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.மேற்கு வங்கத் தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 27ல் துவங்கி, இம்மாதம் 29 வரை,
 கலவரத்தில் கொல்லப்பட்ட குடும்பத்தை சந்தித்தார் மம்தா

மாத்தபங்கா:'மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் வன்முறையில், நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவேன்' என, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத் தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 27ல் துவங்கி, இம்மாதம் 29 வரை, எட்டு கட்டங்களாக நடக்கிறது. இதன் நான்காம் கட்ட தேர்தல், கடந்த 10ம் தேதி நடைபெற்றது.

கூச் பெஹார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடியில் திடீரென கலவரம் வெடித்தது. அப்போது, போலீசாரின் துப்பாக்கியை கலவரக்காரர்கள் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், நான்கு பேர் உயிர்இழந்தனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து, கூச் பெஹாருக்குள் அரசியல் கட்சியினர் நுழைய, 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.அந்த தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி, கூச் பெஹார் சென்று, உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.'கலவரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவேன்' என, குடும்பத்தினரிடம் மம்தா உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
15-ஏப்-202123:00:17 IST Report Abuse
sankar தண்டிக்கப்படவேண்டிய நபர் நீ தான்
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
15-ஏப்-202107:59:47 IST Report Abuse
Nallavan Nallavan சுடப்பட்டு இறந்தவர்கள் திரிணாமூல் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட பங்களாதேசிகள் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது .......... ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு நன்றி ..........
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
15-ஏப்-202102:54:14 IST Report Abuse
Milirvan எப்புடீ.. தேர்தல்'ல கவுந்து ஆச்சி புட்டுக்கன பொறவு எப்புடீ..? ஏண்டா துப்பாக்கிய புடுங்க போன'ன்னு கேளேன் மம்மு..? கேக்க மாட்டியா..? ரைட்டு .. வுடு.. "ஜெய் ஸ்ரீராம்"'ன்னு வொன்ன பாத்தாலே கூவபோறாங்கோ.. அத கேளு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X