பொது செய்தி

இந்தியா

யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா பாதிப்பு

Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
லக்னோ:உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.நேற்று முன்தினம், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலக அதிகாரிகள் சிலர், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர். இதனால், முதல்வரும் பரிசோதனை செய்து கொண்ட நிலையில், அதன் முடிவு வெளியானது. அதில், அவருக்கு, வைரஸ் பாதிப்பு உறுதியானது.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள,
 யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா பாதிப்பு

லக்னோ:உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலக அதிகாரிகள் சிலர், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர். இதனால், முதல்வரும் பரிசோதனை செய்து கொண்ட நிலையில், அதன் முடிவு வெளியானது. அதில், அவருக்கு, வைரஸ் பாதிப்பு உறுதியானது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில், 'முதற்கட்ட அறிகுறிகள் தென் பட்டதால், பரிசோதனை செய்து கொண்டேன். வைரஸ் பாதிப்பு உறுதியானதால், டாக்டர்கள் அறிவுரைப்படி தனிமையில் உள்ளேன். 'அலுவலக பணிகளை, 'ஆன்லைன்' வாயிலாக மேற்கொள்வேன்' என, கூறி உள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சமீபத்தில், கும்ப மேளா நிகழ்ச்சிக்காக, உத்தரகண்டின் ஹரித்வார் சென்று திரும்பினார். அங்கு அவர் சந்தித்த சிலர், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானது பின் தெரியவந்தது.இதையடுத்து, லக்னோவில் பரிசோதனை மேற்கொண்ட அகிலேஷ் யாதவுக்கு, கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், 'கொரோனா பாதிப்பு உறுதியானதால், வீட்டில் தனிமையில் சிகிச்சை பெறுகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகிறேன்' என, கூறி உள்ளார்.இம்மாநில நகர்ப்புற மேம் பாட்டுத் துறை அமைச்சர் அசுதோஷ் டாண்டனும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதால், வீட்டில் தனிமையில் இருந்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
15-ஏப்-202105:25:07 IST Report Abuse
தல புராணம் ராம் நாம் சத்ய ஹை ன்னு முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X