பொது செய்தி

இந்தியா

வைரஸ் பரவல் வேகம் உயர்வு ஒரு நாள் பாதிப்பு 1.84 லட்சம்

Added : ஏப் 14, 2021
Share
Advertisement
புதுடில்லி:நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் வேகம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில், 1.84 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டு உள்ள அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 14.12 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் நடத்தப் பட்டன. இதன் முடிவு கள் வாயிலாக, 1.84 லட்சம் பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்
 வைரஸ் பரவல் வேகம் உயர்வு ஒரு நாள் பாதிப்பு 1.84 லட்சம்

புதுடில்லி:நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் வேகம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில், 1.84 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டு உள்ள அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 14.12 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் நடத்தப் பட்டன. இதன் முடிவு கள் வாயிலாக, 1.84 லட்சம் பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டது.இதையடுத்து, வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 38 லட்சத்து, 73 ஆயிரத்து, 372 ஆக அதிகரித்துஉள்ளது.

மத்திய - மாநில அரசு களின் தொடர் முயற்சி யால், கொரோனா தொற்றில் இருந்து, ஒரு கோடியே, 23 லட்சத்து, 36 ஆயிரத்து, 36 பேர் குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 88.92 சதவீதமாக உள்ளது.வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, 13.66 லட்சத்தை நெருங்கி உள்ளது.

கொரோனாவால் கடந்த, 24 மணி நேரத்தில், 1,027 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை, 281 ஆக உள்ளது.சத்தீஸ்கரில், 156; உத்தர பிரதேசத்தில், 85; டில்லியில், 81; குஜராத் மற்றும் கர்நாடகாவில் தலா, 67; பஞ்சாபில், 50; மத்திய பிரதேசத்தில், 40. ஜார்க்கண்டில், 29; ராஜஸ்தானில், 28; கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா, 20; தமிழகத்தில், 18; ஹரியானாவில், 16 இறப்புகள் பதிவாகி உள்ளன.

இவர்களுடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 72 ஆயிரத்து, 85 ஆக அதிகரித்து உள்ளது.இதில் மஹாராஷ்டிரா, 58 ஆயிரத்து, 526 பேருடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, கர்நாடகாவில், 13 ஆயிரத்து, 8 பேரும், தமிழகத்தில், 12 ஆயிரத்து, 945 பேரும் பலியாகி உள்ளனர்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


11.11 கோடி 'டோஸ்' தடுப்பூசிகள்

நாட்டில், நேற்று ஒரே நாளில் புதிதாக, 1.84 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 82.04 சதவீதம் பேர் தமிழகம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் உட்பட, 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மஹாராஷ்டிராவில் மட்டும், 60 ஆயிரத்து, 212 பேரிடம், பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சிகிச்சையில் இருக்கும், 13.65 லட்சம் பேரில், 68.16 சதவீதம் பேர் மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கடந்த, 24 மணி நேரத்தில், 26.46 லட்சம் 'டோஸ்' தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதனுடன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 11 கோடியே, 11 லட்சத்து, 79 ஆயிரத்து, 578 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என, மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X