சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'யார் தான், எதைப் பற்றித் தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது; அதனால் தான் அரசியல் என்கின்றனரோ... என, கேட்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: எங்களுக்கு துரோகம் செய்ததில், இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ்., என இருவருமே சமம் தான். முதல் துரோகம் செய்தவர் பன்னீர்செல்வம்; அதை பயன்படுத்தி துரோகம் செய்தவர் இ.பி.எஸ்., முதல்வராகும் வாய்ப்பு கிடைத்த,


பேச்சு, பேட்டி, அறிக்கை

'யார் தான், எதைப் பற்றித் தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது; அதனால் தான் அரசியல் என்கின்றனரோ... என, கேட்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: எங்களுக்கு துரோகம் செய்ததில், இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ்., என இருவருமே சமம் தான். முதல் துரோகம் செய்தவர் பன்னீர்செல்வம்; அதை பயன்படுத்தி துரோகம் செய்தவர் இ.பி.எஸ்., முதல்வராகும் வாய்ப்பு கிடைத்த, இ.பி.எஸ்., அரசு கஜனாவை துார் வாரிவிட்டார்.


'பெரிய ஆளுடன், பெரிய கட்சியுடன் சண்டையிட்டால் தான் பலசாலியாக முடியும் என்ற நம்பிக்கையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
: நான், தி.மு.க.,வைத் தான் எதிர்ப்பேன். திராவிடக் கட்சிகளின் தலைமை அது தான். அதனால் மட்டுமின்றி, என் சொந்தங்கள், இலங்கையில் செத்த போது, பதவிக்காக வேடிக்கை பார்த்தது, தி.மு.க., தான். அதனாலும், தி.மு.க.,வை எதிர்க்கிறேன்.


'அரசியல் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்றால், தி.மு.க., மீது நீங்கள் கூறிய ஊழல் புகார்கள், முறைகேடுகளை செய்தது தனிநபர்களா அல்லது வேற்று கிரகவாசிகளா...' என, கேட்கத் துாண்டும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசன் பேட்டி:
எனக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது தனிப்பட்ட விரோதம் எல்லாம் கிடையாது. அவரை, அவரின் அப்பா காலத்திலிருந்தே எனக்கு தெரியும். நாங்கள் நேரில் சந்தித்துக் கொள்ளும் போது நன்றாக பேசிக் கொள்வோம். அரசியல் வேறு; தனிப்பட்ட வாழ்க்கை வேறு.


'நாகரிக அரசியலை நீங்கள் விரும்பினால் மட்டும் போதுமா; எதிரணியினரும் விரும்ப வேண்டுமே... ராசா போன்றவர்கள் தரக்குறைவாக அல்லவா பேசுகின்றனர்...' என, நினைவூட்டத் தோன்றும் வகையில், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி:
நாங்கள் நாகரிகமான அரசியல் செய்ய விரும்புகிறோம். என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்பவர்களை நான் கண்டுகொள்வதில்லை. ஆனால், கட்சி சார்பாக விமர்சனம் செய்பவர்களை மட்டுமே எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம். கட்சியில் பொறுப்பில் இருக்கும் அனைவரும் உழைப்பால் முன்னேறியவர்கள்.


'கடைசி வரை நீங்களும் தான், இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை எல்லாம், முதல்வர் மீதும், தமிழக அரசு மீதும் சுமத்துவதில் சளைப்பதே இல்லை...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை:
சென்னை பூவிருந்தவல்லி சாலைக்கு, எம்.ஜி.ஆர்., இட்டிருந்த பெரியார் பெயரை, 'கிராண்ட் வெஸ்ட்ரன் டிரங்க் ரோடு' என, முதல்வர், இ.பி.எஸ்., மாற்றியிருக்கிறார். பெரியாரை நஞ்சாய் வெறுக்கும், பா.ஜ.,வினரை குளிர்விக்கவே இந்த வேலை. கடைசி வரை தன் அடிமை உத்யோகத்தை, முதல்வர் செவ்வனே செய்கிறார்!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karunan - udumalpet,இந்தியா
15-ஏப்-202107:05:47 IST Report Abuse
Karunan அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தவர் எம் ஜி ஆர் ..இ பி எஸ் ஓ பி எஸ் எம் ஜி ஆர் காலத்திலிருந்தே கட்சியில் இருப்பவர்கள் ...ஜெயலிதாவுக்கு வேலைக்காரியாக வந்த உங்க சித்தியும் நீயும் எப்படி துரோகம் பற்றி பேசலாம் ...ஜெலலிதாவால் கட்சிலிருந்தே துரத்தப்பட்டவன் தானே நீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X