பொது செய்தி

இந்தியா

'சமஸ்கிருதம் தேசிய மொழி: பரிந்துரைத்தார் அம்பேத்கர்'

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
நாக்பூர் :''சமஸ்கிருதத்தை, நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக அறிவிக்க, அம்பேத்கர் பரிந்துரை செய்தார்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நேற்று தெரிவித்தார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.அம்பேத்கரின், 130வது பிறந்த நாளான நேற்று, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள, தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில்,
'சமஸ்கிருதம் ,தேசிய மொழி பரிந்துரை, அம்பேத்கர்'

நாக்பூர் :''சமஸ்கிருதத்தை, நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக அறிவிக்க, அம்பேத்கர் பரிந்துரை செய்தார்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நேற்று தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.அம்பேத்கரின், 130வது பிறந்த நாளான நேற்று, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள, தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில், புதிய கட்டட துவக்க விழா நடைபெற்றது.இதில், மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான நிதின் கட்கரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உள்ளிட்டோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பாப்டே பேசியதாவது:
இன்றைய நிகழ்ச்சியில், எந்த மொழியில் உரையாற்றுவது என்பது குறித்து, காலையில் தீவிரமாக யோசித்தேன்.

இன்றைய தினம், அம்பேத்கரின் பிறந்த தினம். அது நினைவுக்கு வந்ததும், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் மொழிக்கும், பணியின்போது நாம் பயன்படுத்தும் மொழிக்கும் நீண்ட நாட்களாக உள்ள முரண் குறித்து நினைவு வந்தது.

இதை அம்பேத்கர் முன்பே எதிர்பார்த்துள்ளார். எனவே தான், அவர் சமஸ்கிருதத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக அறிவிக்க பரிந்துரைத்தார்.வட மாநிலத்தவர்கள், தமிழ் மொழியை தேசிய மொழியாக ஏற்க மாட்டார்கள். அதே போல, தென் மாநிலத்தவர்கள், ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்க மாட்டார்கள் என்பதை, அம்பேத்கர் அன்றே உணர்ந்துள்ளார்.சமஸ்கிருதத்திற்கு இரு பகுதிகளிலும் பெரும் எதிர்ப்பு இருக்காது என்பதால் இந்த பரிந்துரையை அவர் முன்வைத்துள்ளார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Aruna - Trichy,இந்தியா
16-ஏப்-202115:45:32 IST Report Abuse
S.Aruna samaskritha valarchi
Rate this:
Cancel
gayathri - coimbatore,இந்தியா
16-ஏப்-202111:36:48 IST Report Abuse
gayathri athu yen vetri peravillai
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-ஏப்-202100:26:15 IST Report Abuse
Pugazh V சும்மா அடிச்சு வுட வேண்டியது தான். நிஜமாகவே அம்பேத்கர் அப்படி சொன்னாரா என்று எவன் கேட்கப் போகிறான்? அப்படியே கேட்டாலும் அப்படி கேட்டவனை டுமீலன் டாஸ்மாக் திரவிஸம் அர்பன் நக்சல் பாகிஸ்தான் இத்தாலி என்று சம்பந்தமே இல்லாமல் எழுதி கலாய்ச்சிட வேண்டியது தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X