பொது செய்தி

இந்தியா

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு ரத்து!

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (4+ 6)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. பலர் வைரசால் பாதிக்கப்பட்டு, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைத்தும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. தினமும் பாதிக்கப்படுவோரின்
 சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, தேர்வு  ரத்து!

புதுடில்லி : நாட்டில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. பலர் வைரசால் பாதிக்கப்பட்டு, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைத்தும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை எட்டி வருகிறது. இதையடுத்து, பல மாநிலங்களில், 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; பிளஸ் 2 தேர்வை மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.


கோரிக்கைஇதற்கிடையே, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மே 4ம் தேதி முதல் துவங்க இருந்தன. 'கொரோனா பரவல் காரணமாக, 10ம் வகுப்பு தேர்வை, சி.பி.எஸ்.இ., ரத்து செய்ய வேண்டும்' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா உட்பட, பல கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேலும், '10 மற்றும் பிளஸ் 2- வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் தேர்வை நடத்த வேண்டும்' எனக் கோரி இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், மத்திய அரசுக்கு மனு அனுப்பினர்.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், பிரதமரின் முதன்மை செயலர், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை செயலர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது.


அறிக்கைகூட்டத்துக்குப் பின், மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும், சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும், ரத்து செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு முறையைக் கணக்கிட, புதிய வழிகாட்டுதலை, சி.பி.எஸ்.இ., விரைவில் வெளியிடும்.

அதன்படி வழங்கப்படும் மதிப்பெண், ஏதாவது ஒரு மாணவருக்கு மன நிறைவைத் தரவில்லை என்றால், அந்த மாணவர், தனிப்பட்ட முறையில் பள்ளிக்குச் சென்று முறையிட்டு, தேர்வு எழுதலாம். அதற்கான சூழல் இருந்தால், தேர்வுகள் நடத்தப்படும்.அடுத்து, மே 4-ம் தேதி துவங்கி, ஜூன் 12ல் நடக்க இருந்த, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் அனைத்தும், ஒத்தி வைக்கப்படுகின்றன. ஜூன் 1-ம் தேதி, சி.பி.எஸ்.இ., வாரியம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து, முடிவு எடுக்கும். தேர்வு நடத்த ஏதுவான சூழல் இருந்தால், தேர்வு குறித்து, 15 நாட்களுக்கு முன், மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த முடிவை, 10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் வரவேற்றுள்ளனர். இது பற்றி, அவர்கள் கூறுகையில், 'தேர்வுகளை தள்ளி வைக்காமல், ரத்து செய்தது நல்ல முடிவு. இதனால், எங்கள் குழந்தைகள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல், பிளஸ் 1 வகுப்பு பாடங்களை படிக்கத் துவங்குவர்' என்றனர்.எனினும், பிளஸ் 2 தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு, மாணவர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், 'நாங்கள் வெளிநாடு சென்று படிக்கத் திட்டமிட்டுள்ளோம். தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், முடிவுகள் வெளிவருவதும் தாமதமாகும். இது, வெளிநாட்டில் படிக்கும் எங்கள் விருப்பத்தை பாதிக்குமோ என, அச்சமாக உள்ளது' என்றனர்.


மதிப்பெண் மதிப்பீடு எப்படி?
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண், கடந்த ஆண்டை போலவே மதிப்பிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள், பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன. இதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டுக்கான வழிமுறைகளையும், சி.பி.எஸ்.இ., தெரிவித்தது. அதன்படி, நான்கு பாடங்களில் தேர்வு எழுதியிருந்த மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. மூன்று பாடங்களில் தேர்வெழுதியிருந்தவர்களுக்கு, அதிக மதிப்பெண் பெற்ற இரண்டு பாடங்களின் மதிப்பெண், கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தேர்வு எழுதியிருந்த மாணவர்களுக்கு, அவர்களின் செய்முறை தேர்வு மதிப்பெண், உள்மதிப்பீட்டு மதிப்பெண் ஆகியவை, கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இம்முறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஆனால், எந்தப் பாடத்திலும் தேர்வு நடத்தப்படவில்லை. அதனால், செய்முறை தேர்வு மதிப்பெண், உள்மதிப்பீட்டு மதிப்பெண் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு, மாணவர்களுக்கு மதிப்பெண் தரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


பெற்றோருக்கு நிம்மதிசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வை, மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். இதனால், பல லட்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

பிளஸ் 2 வகுப்புக்கும் ரத்து

ஒரு வழியாக, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல், பிளஸ் 2 தேர்வையும், ரத்து செய்ய வேண்டும். ஜூன் மாதம் வரை, மாணவர்கள், பெற்றோரை நெருக்கடியில் வைப்பது நியாயமல்ல. இது பற்றி, உடன் முடிவு எடுக்க வேண்டும்.பிரியங்கா, பொதுச் செயலர், காங்.,


Advertisement
வாசகர் கருத்து (4+ 6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murug - Chennai,இந்தியா
15-ஏப்-202114:56:42 IST Report Abuse
Murug In Chennai, some of the CBSE schools are asking X students to come to schools and appear for the tests, scheduled next week. Why don't they conduct the tests online or take the average of the marks scored in the tests conducted so far? Even heard, few teachers and family members of the students are affected. But the managements expect the students to come to school even tomorrow and coming weeks, even though the board exam is cancelled by CBSE.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
15-ஏப்-202111:39:57 IST Report Abuse
அசோக்ராஜ் வானிலை ரமணன் மாணவர்களுக்கு குலச்சாமியாய் இருந்தார். கொரோனா வைரஸோ விஸ்வேஸ்ரனாக மாணவர்களை ஆசீர்வதிக்கிறது. அதிர்ஷ்டக்கார தலைமுறை.
Rate this:
Cancel
Ela -  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-202104:36:23 IST Report Abuse
Ela சில நாட்களுக்கு முன்பு, இதே தலைப்பில் கமெண்ட் பதிவிட்டவர்களில் நானும் ஒருவன். மத்திய அரசு தினமலர் கமெண்ட்களை விடாமல் படிக்கிறதோ என எண்ணத் தோன்றும் வகையில், என் வேண்டுகோளான பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பு அறிவிப்பும் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நமது கருத்தை, தலைநகருக்கு கேட்கும் வரை, உரைத்தமைக்கு தினமலருக்கு நன்றி! Tailpiece: My daughter is studying 10th STD...hehehe...(Anthumani style)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X